சென்னை மக்கள் கவனத்திற்கு.. நாளை மதியம் 3 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து!
சென்னை: நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் பெரும்பாலானோர் புறநகர் ரயில்களை தங்கள் அன்றாட பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அலுவலகங்கள், வேலைக்குச் செல்ல, பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல என லட்சக்கணக்கானோர் நாள்தோறும் புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதிக்கு ஏற்ப, அதிகளவில் ரயில்களை இயக்கி வருகிறது.

பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அவ்வப்போது சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 3 மணி வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்கள் என்பதால், இந்த ரயில் சேவை ரத்து காரணமாக வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications