வடசென்னை மக்களே கவனம்.. சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ரத்து
சென்னை: வடசென்னை மக்களை பெருநகர சென்னையுடன் இணைப்பதில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில், இன்று சென்ட்ரலிலிருந்தும், சென்னை கடற்கரையிலிருந்தும் கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் வடசென்னை மக்கள் வேறு போக்குவரத்து வசதிகளை அணுகவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எண்ணூர், எர்ணாவூர், தாழங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள் திருவொற்றியூர் விம்கோவுக்கு வந்துவிட்டால் போதும். அங்கிருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மின்சார ரயில்கள் ரத்து குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், "கவரைப்பேட்டை - பொன்னேரி இடையே இன்றும், நாளை மறுநாளும் (மார்ச் 1) காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, சென்னை சென்ட்ரலிலிருந்து காலை
8.05
8.35
9
9.30
10.15
10.30
11.35
ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
மறுமார்க்கமாக கும்மிடிபூண்டியில் இருந்து காலை
9.55
10.55
11.25
12
1
2.30-க்கு
புறப்படும் ரயில்களும், சூலூர்பேட்டையிலிருந்து முற்பகல் 11.45, பிற்பகல் 1.15-க்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படும். மட்டுமல்லாது செங்கல்பட்டிலிருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 9.55-க்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிபூண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.40, 11.35-க்கும், மறுமார்க்கமாக பொன்னேரியில் இருந்து காலை 10.13, 11.13, பகல் 12.18, பிற்பகல் 2.48, 3.33-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
பொன்னேரி-சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.13-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு பிற்பகல் 12.40-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். தவிர, சென்னை சென்ட்ரல்-மீஞ்சூருக்கு காலை 9.30-க்கும், எண்ணூருக்கு காலை 10.30-க்கும், மறுமார்க்கமாக மீஞ்சூரிலிருந்து காலை 11.56-க்கும், எண்ணூரிலிருந்து பிற்பகல் 1.43-க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications