தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை
சென்னை: சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் பாதை பரங்கிமலை வரை சுமார் 5 கி.மீ. தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வழித்தடத்தில் நேற்று வெற்றிகரமாக பறக்கும் ரயிலை ஓட்டி சோதனை செய்யப்பட்டது. அனேகமாக பிரதமர் மோடி இந்த ரயிலை தொடங்கி வைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த வழித்தடம் திறக்கப்பட்ட பின்னர், பரங்கிமலையில் இறங்கி வேளச்சேரி செல்லும் ரயில் மூலம் மயிலாப்பூருக்கு எளிதாக செல்ல முடியும். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு செல்ல ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் பாதையை பரங்கிமலை வரை சுமார் 5 கி.மீ. தூரம் நீட்டிக்கும் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கியது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் நீண்ட காலம் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னர் 2022-ம் ஆண்டு மீண்டும் தொடங்கியது. பணிகள் பல்வேறு சவால்களை கடந்து பின்னர் அண்மையில் பணிகள் நிறைவடைந்தன.

தெற்கு ரயில்வே அறிவிப்பு
இதையடுத்து வேளச்சேரி-பரங்கிமலை இடையே 10 பெட்டிகளுடன் சரக்கு ரயில் இயக்கி பரிசோதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து வேளச்சேரி-பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் மார்ச் 10-ந்தேதி பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதையடுத்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் வசதி உட்பட பல்வேறு வசதிகளை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.
ரயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் ஆய்வு
இறுதியாக வேளச்சேரி - பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் ஜனக்குமார் கார்க் டெல்லியில் இருந்து தனது குழுவினருடன் வந்து நேற்று ஆய்வு செய்தார். பரங்கிமலையில் இருந்து வேளச்சேரி வரை டிராலியில் சென்று ரயில் தண்டவாளம், சிக்னல் அமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தார்.
சோதனை ஓட்டம் வெற்றிகரம்
அதைத் தொடர்ந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், ரயில் நிலையங்களை ஆய்வு செய்தார். பின்னர் நேற்று மாலை 3.15 மணி அளவில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு பறக்கும் ரயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கிப்பார்த்து சோதனை செய்தார். சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
10ம் தேதி திறக்கப்படுமா
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் வெற்றிகரமாக சோதனையை முடித்திருக்கிறார். எனவே வருகிற 10-ந்தேதி பறக்கும் ரயில் சேவையை தொடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் தாம்பரத்தில் இருந்து மயிலாப்பூர் செல்லும் பயணிகள் இனி கடற்கரை சென்று ரயில் மாற வேண்டியதிருக்காது.
தாம்பரம் ரயில்களை பிடிக்க முடியும்
பரங்கிமலையில் இறங்கி வேளச்சேரி செல்லும் ரயில் மூலம் மயிலாப்பூருக்கு ஈஸியாக இனி மக்கள் போக முடியும். அதேபோல் மயிலாப்பூர், திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தாம்பரம் செல்வதற்கு வேளச்சேரி-பரங்கிமலை சென்று அங்கிருந்து தாம்பாரத்துக்குச் சென்று விரைவு ரயில்களை பிடிக்க முடியும்" இவ்வாறு கூறினார்கள்.
வேளச்சேரி கடைசி ரயில் நிலையம் அல்ல
வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடம் வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், இனி வேளச்சேரி கடைசி ரயில் நிலையமாக இருக்காது. கடைசி ரயில் நிலையமாக பரங்கிமலை இருக்கும். கடற்கரை வேளச்சேரி ரயில்கள் இனி பரங்கிமலை வரை செல்லும். இதன் காரணமாக ரயில்களின் நேரம் அடியோடு மாற்றியமைக்கப்படும். நிறைய மக்கள் வந்து செல்வார்கள் என்பதால், கூடுதல் ரயில் சேவைகள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
தாம்பரம் இருந்து வேளச்சேரிக்கு ரயில்
அதேபோல் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு செல்ல ரயில்கள் விட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. தாம்பரத்தில் இருந்து வரும் மக்கள் அப்படியே பரங்கிமலை, வேளச்சேரி வழியாக மெரினா கடற்கரைக்கு, மயிலாப்பூருக்கு, தரமணி ஐடி நிறுவனங்களுக்கு, வேளச்சேரிக்கு எளிதாக செல்ல முடியும். அதற்கு ஏற்ற வகையில் ரயில் அட்டவணையை திருத்தினால் மக்கள் பலர் ரெயில் போக்குவரத்தையே பிரதானமாக விரும்புவார்கள். தெற்கு ரயில்வேக்கு கோரிக்கைகள் சென்றுள்ளன.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications