ஜோலார்பேட்டை வழியா போறீங்களா? 3 நாளைக்கு ரயில்கள் கிடையாது! ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: ரயில் விபத்துகளை தடுக்க, தண்டவாளம், சிக்னல் உள்ளிட்டவை குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இவ்வழியாக இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,200 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் ரயில் தடங்கள் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக அளவு ரயில்கள் இயக்கப்படுவதுதான் ரயில் விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக சொல்லப்படுகிறது.

எனவே தண்டவாளத்தின் தரம், சிக்னல் செக்கிங் என ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி இன்று முதல் மூன்று நாட்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஈரோட்டிலிருந்து அதிகாலை 6.25 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06412) மற்றும் மறு மார்க்கமாக ஜோலார்பேட்டையிலுருந்து பிற்பகல் 3.10 மணிக்கு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06411) ஜூன் 24,26,28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல பெங்களூரிலிருந்து காலை 8.45 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06551) மற்றும் மறு மார்க்கமாக ஜோலார்பேட்டையிலுருந்து பிற்பகல் 2 மணிக்கு பெங்களூரு செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06552) ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், சாந்த்ராகாச்சியிலிருந்து ஜூன் 23 இரவு 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் குளிர்சாதன அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22807) மற்றும் மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஜூன் 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு சாந்த்ராகாச்சி செல்லும் ரயில் (வண்டி எண்: 22808) முழுமையாக ரத்து செய்யப்பட்டுகிறது.
மேற்குவங்கத்தின் ஹவுராவிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 23) மாலை 4.15 மணிக்கு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக மைசூரு செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22817) மற்றும் மறு மார்க்கமாக மைசூரிலிருந்து ஜூன் 25 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு ஹவுரா செல்லும் ரயில் (வண்டி எண்: 22818) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது" என கூறியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications