அரசு பேருந்து ஓட்டையில் விழுந்த பெண்.. அலறிய சென்னை! உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர பேருந்தில் இருந்த ஓட்டையில் பெண் ஒருவர் விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

சம்பவம்: சென்னை வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு செல்லும் 59 தடம் எண் கொண்ட பெண்களுக்கான கட்டணமில்லா அரசு பேருந்து இன்று காலை வழக்கம்போல புறப்பட்டிருக்கிறது. வள்ளலார் நகரிலிருந்து புறப்பட்ட பேருந்து சென்ட்ரலை கடந்து அமைந்தகரை வந்துக்கொண்டிருந்தபோது பேருந்தில் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. சத்தத்தை கேட்ட டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தியிருக்கிறார்.

Transport Corporation ordered to take departmental action in case of woman falling into bus hole in Chennai

ஓட்டை: பின்னர்தான் பேருந்தின் ஓட்டை வழியே பெண் ஒருவர் தவறி சாலையில் விழுந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. பேருந்தில் ஏற்கெனவே ஓட்டை இருந்திருக்கிறது என்றும், அந்த ஓட்டை பலகை கொண்டு மறைக்கப்பட்டிருந்திருக்கிறது எனவும் சக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பலகை, ஓவர் வெயிட் காரணமாக உடைந்து விழுந்திருக்கிறது. ஓட்டையில் சிக்கிய பெண் கொஞ்ச தூரம் சாலையில் இழுத்து செல்லப்பட்டிருக்கிறார்.

பராமரிப்பு: இதனையடுத்து பெண்ணை மீட்ட சக பயணிகள், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என்று பயணிகள் கூறுகின்றனர். மறுபுறம் போக்குவரத்து கழகத்திற்கு போதுமான அளவு நிதி இல்லாததால்தான் ஓட்டை பேருந்துகளை இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.

தொழிற் சங்கங்கள் சொல்வதென்ன? இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமல்படுத்தப்படுகிறது. இதனால் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டுவது கிடையாது.

நிதி: தமிழக மின்வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்றவற்றிற்கு முழுமையான இழப்பை ஈடுகட்டும் அரசு, தினமும் 2 கோடி மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களைப் புறக்கணிக்கின்றது. அவசரத் தேவைக்காக போக்குவரத்து கழகங்களுக்கு அவ்வப்போது அரசு வழங்கும் பணத்திற்குக்கூட வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து கழகங்களை சிறப்பாக செயல்படுத்த வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.

அரசு பேருந்துகள்: கடந்த 2017ம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. 2018ம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை. சுமார் 20,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில், பணியாளர் பற்றாக்குறையால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளனர்.

தீர்வு: இவையெல்லாம் சரி செய்யப்படும் பட்சத்தில்தான் அரசு பேருந்துகளின் தரம் உயர்த்தப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்படி இருக்கையில், பேருந்து ஓட்டையில் பெண் விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, பேசின் பிரிட்ஜ் பேருந்து பணிமனையின் கிளை மேலாளர், தொழில்நுட்ப பொறியாளர் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+