சென்னை மட்டுமல்ல.. தமிழகம் முழுக்க அரசு பஸ்களில் வருது பெரிய மாற்றம்.. தமிழக அரசு செம பிளான்
சென்னை: பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக சென்னை நகர பேருந்துகளில் சிங்கார சென்னை டிஜிட்டல் பயண அட்டை மூலமாக பயணம் செய்யும் வசதி உள்ளது. தற்போது இந்த டிஜிட்டல் பயண அட்டையை தமிழக அரசு அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுக்க அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் விழுப்புரம், கும்பகோணம் உள்பட 8 போக்குவரத்து கழகங்கள் மூலமாக போக்குவரத்த்து சேவை நடைபெற்று வருகிறது.

தொலை தூரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வாயிலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓடும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளில் பல லட்சக்கணக்கானவர்கள் பயணித்து வருகிறார்கள். அரசு போக்குவரத்து கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் இயங்கினாலும் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிங்கார சென்னை டிஜிட்டல் பயண அட்டை
குறிப்பாக தொலை தூரங்களுக்கு செல்ல ஏசி பேருந்துகள், படுக்கை வசதியுடன் கொண்ட ஸ்லீப்பர் பஸ்கள் உள்ளிட்டவையும் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி தொலை தூர பேருந்துகளை டிராக் செய்யும் வசதியும் சென்னை பஸ் செயலி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக சென்னை நகர பேருந்துகளில் சிங்கார சென்னை டிஜிட்டல் பயண அட்டை மூலமாக பயணம் செய்யும் வசதி உள்ளது.
கடந்த மாதம் 6 ஆம் தேதி இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டையின் மூலம் அரசு பேருந்துகளில் மட்டுமின்றி மெட்ரோ ரெயில்களிலும் பயணிக்கலாம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, தமிழக அரசு அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளில் இதுபோன்ற டிஜிட்டல் பயண அட்டையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஜிட்டல் பயண அட்டை
பயணிகள் டிக்கெட் வாங்கும் போது சில்லறை பிரச்சினை ஏற்படாது. அதோடு பயணிகள் எளிதாக பயணம் செய்ய முடியும். இந்த டிஜிட்டல் பயண அட்டை என்பது 'என்.எப்.சி.என்ற தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது. எனவே, இதனை அனைத்து இடங்களிலும் மிகவும் எளிதாக பயன்படுத்த முடியும். ஜிபே போன்றவை பயன்படுத்தும் போது ஏற்படும் டிஜிட்டல் பிரச்சினைகள் பெரும்பாலும் ஏற்படாது.
நடத்துனர்கள் பயன்படுத்தி வரும் மின்னணு டிக்கெட் வழங்கும் கருவியில் டிஜிட்டல் பயண அட்டையை தொட்ட உடன் பயண அட்டையில் இருந்து பயணத்திற்கு தேவையான பணமானது போக்குவரத்துக் கழகத்தின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். அதைத் தொடர்ந்து நடத்துனர் டிக்கெட் வழங்குவார்.
ரீசார்ஜ் செய்ய வேண்டும்
இந்த டிஜிட்டல் பயண அட்டையை பஸ் பயணிகள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் பஸ்களில் பயணிப்பதற்கு முன்பே கணிசமான தொகை முன்கூட்டியே கிடைத்து விடுகிறது. இந்த டிஜிட்டல் பயண அட்டை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
தற்போது டிஜிட்டல் பயண அட்டைகளை பயன்படுத்தும்போது பயணிகளுக்கு பிரிண்ட் டிக்கெட் வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இன்னும் மேம்படுத்தப்பட்டு டிக்கெட் வழங்காமலேயே மக்கள் பயணம் செய்யும் நடைமுறைகள் கூட கண்டறியப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் சிங்கார சென்னை பயண அட்டையின் மூலம் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் பயணிக்க முடியும். இந்த அட்டையில் ரூ.100 முதல் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை இதில் இருப்பு வைக்கலாம். பயண அட்டையில் உள்ள பணத்தை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியாகும் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதே போல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் டிஜிட்டல் அட்டைகளுக்கும் ரீசார்ஜ் செய்ய வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த டிஜிட்டல் அட்டைகள் பயன்பாட்டிற்கு வந்தால் சில்லறை பிரச்சினை என்பது தீர்ந்துவிடும் என்பதால் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற விவரம் தெரியவில்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications