Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடை லீவு.. பஸ்ஸில் ஊருக்கு போறீங்களா? இதோ தமிழ்நாடு அரசின் மாஸ் அறிவிப்பு.. துள்ளிகுதிக்கும் பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டன. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.. அதனால், சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம், போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அரசு பஸ்கள் காலியாக ஓடுகின்றன.. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

பயண சலுகை: வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் பஸ்களில் கூட்டம் நிரம்புகிறது... இப்படிப்பட்ட சூழலில்தான், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. அதாவது, நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவும், ஆம்னி பஸ் பயணிகளை இழுக்கவும் இந்த பயண சலுகை திட்டம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

விரைவு பஸ்கள்: அதன்படி, அரசு விரைவு பஸ்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்த பிறகு 6-வது முறை பயணத்தில் இருந்து ஒவ்வொரு பயணத்திற்கும் 50 சதவீத கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சலுகையை சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருக்கிறார்.. அதாவது, 5 முறை பயணம் செய்வதற்கு, எந்தவிதமான சலுகையும் கிடையாது... அதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு முறைக்கும், பாதி கட்டணம் செலுத்தினால் போதுமாம். ஆனால், ஒரே இடத்திற்கு, இந்த பயணம் அமைய வேண்டும்.

Transport: Fantastic announcement and reservation of 50 thousand people in tamil nadu government buses

அதேபோல, எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து ரிசர்வேஷன் செய்ய வேண்டும். பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது... இன்னொரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது.. அரசு 'ஏசி' பஸ்களுக்கு, பயணியரிடையே தற்போது அதிக வரவேற்பு காணப்படுகிறதாம்.. அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், இருக்கை, படுக்கை, கழிப்பறை வசதிகளுடன், 729 ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன...

தனியார் பஸ்களின் பயண கட்டணத்தை விட, அரசு ஏசி பஸ்களின் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், பயணிகள் அதிகளவில் அரசு ஏசி பஸ்களுக்கு முன்பதிவு செய்கிறார்களாம்.. அதனால் வரும் ஜூன் வரை, அனைத்து ஏசி பஸ்களையும் இயக்க உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டது.. இப்போது மற்றொரு சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது..

கோடை விடுமுறை: அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதனால், தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வை முடித்துவிட்டு கோடை விடுமுறையில் உள்ளனர்... அரசு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களும், ரிசல்ட்டுக்காக காத்துள்ளனர்.. எனவே, இவர்கள் வெளியூர்களுக்கு பயணத்தை தொடங்கிள்ளனர். அதேபோல, அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி அதாவது, திங்கட்கிழமை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.. அதனால் இவர்களும் வெளியூர் பயணத்துக்கு தயாராகி வருகிறார்கள்.. இதற்காகவே, பஸ், ரெயில்களில் ரிசர்வேஷனை தொடங்கி உள்ளனர்.

இப்போதைக்கு அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன.. ஆம்னி பஸ்களிலும் கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால், அரசு பஸ்களை நாடி வர துவங்கி உள்ளனர். அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து அரசு பேருந்துகள் இந்த 4 நாட்களும் நிரம்பிவிட்டன. இன்று முதல் மே 1-ந் தேதி வரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 25 ஆயிரம் பேர் வெளியூருக்கு பயணம் செய்ய ரிசர்வ் செய்திருக்கிறார்களாம்.

இதேபோல, வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் ஆயிரக்கணக்கில் முன்பதிவு செய்துள்ளனர்.. எப்படி பார்த்தாலும், 4 நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.. எனவே, 2100 பஸ்களுடன் கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவாகி உள்ளது.

கூடுதல் பஸ்கள்: இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் சொல்லும்போது, மே தினத்தையொட்டி தொடர் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் அரசு பஸ்களில் முன்பதிவு பதிவாகி வருகிறது. பண்டிகை காலத்தில் இருப்பது போலவே, ரிசர்வேஷன் உள்ளது.. 4 நாட்களுக்கு 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.. பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் 4 நாட்களுக்கும் கூடுதலாக தலா 500 பஸ்களை இயக்க திட்டமிட்டிருக்கிறோம்.. அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, புதுவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+