Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீசலே வேண்டாம்.. புகை கக்காது.. இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்கள்.. தமிழ்நாடு முழுக்க வரப்போகுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கை எரிவாயுவில் (CNG) இயங்கும் 6 அரசுப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள், சாமானிய மக்களின் முக்கியமான போக்குவரத்து பயன்பாட்டு சாதனமாக உள்ளது. பொதுமக்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. எதிர்காலத்துக்கு ஏற்றபடியும், சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைக்கும் வகையிலும், செலவினத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும், இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Government bus tn government ss sivasankar

அதன்படி, இன்று இயற்கை எரிவாயுவில் (CNG) இயங்கும் 6 அரசுப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம், டீசலுக்கு பதிலாக சி.என்.ஜி பயன்படுத்தப்படுவதால் எரிபொருள் செலவு பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.என்.ஜி மூலம் இயங்கும் பேருந்துகளை இயக்கி வைத்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும் என்றும் செலவினங்களைக் குறைக்கும் வகையில் 16 CNG, 4 LNG பேருத்துகளும் சோதனை முறையில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

டீசல் செலவு குறையும்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,160 டீசல் பேருந்துகள் மூலம், தினசரி சுமார் 1.76 கோடி பொது மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்துக் கழகங்களின் மொத்த செலவில் சுமார் 27% டீசலுக்காக செலவிடப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசின் நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023-ஐ பரிந்துரைத்துள்ளது.

அதன் அடிப்படையில், குறைந்த கார்பன் உமிழ்வு, அதிகப்படியான கிலோமீட்டர், டீசலைவிட 7% முதல் 20% வரை செலவு குறைந்த, சுற்றுச் சூழலுக்கு உகந்த, சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாயு (LNG) பேருந்துகளை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பரிச்சார்த்த அடிப்படையில் இயக்கிட, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, 7 போக்குவரத்து கழகங்களில் தலா இரண்டு பேருந்துகளில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) பயன்படுத்தி என்ஜினில் மறுசீரமைப்பு செய்து, மொத்தம் 14 பேருந்துகளை இயக்கவும், மேலும் மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம் போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகளில், திரவ நிலை இயற்கை எரிவாயு (LNG) பயன்படுத்தி என்ஜினில் மறுசீரமைப்பு செய்து, மொத்தம் 4 பேருந்துகளை இயக்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக: இதில், முதல் கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 4 திரவ நிலை இயற்கை எரிவாயு (LNG) பேருந்துகள் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 2 சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) பேருந்துகள் என மொத்தமாக 6 பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்து, கீழ்கண்ட 6 வழித்தடங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.

இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வண்டி புகையை கக்காது, எனவே, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தாது. சோதனை அடிப்படையில் இயக்கப்படும் இந்த பேருந்தானது, வேகம், இழுவைத்திறன் போன்றவை சிறப்பாக இருந்தால் தொடர்ந்து, இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

தானியங்கி கதவுகள்: மேலும், அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தவிர்க்கும் நோக்கில், புதிய பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதைப் போன்று, தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

ஜிபிஎஸ் கருவி: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் டிஜிட்டல் பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 3 ஆயிரம் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். மேலும், அரசுப் பேருந்துகளில் யுபிஐ (UPI) முறையில் பேருந்து கட்டணம் வசூலிக்கும் முறை சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+