Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இதுவரை யாரும் செய்யத் துணிந்திடாத ஒன்றைச் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்”: அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்புவனம் அஜித் குமார் கஸ்டடி மரண விவகாரத்தில் யாரும் செய்யாத ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் செய்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித் குமாரின் தாயாரிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதை குறிப்பிட்டு, டி.ஆர்.பி. ராஜா இவ்வாறு கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் மடப்புரத்தில் உள்ள ஒரு கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்தார். இதனிடையே, கோயில் நகை திருடு போனதாக கூறி, இவர் மீது திருப்புவனம் காவல் நிலையத்தில் இரு பெண்கள் புகார் அளித்தனர்.

TRB Rajaa Praises CM Stalin s Unprecedented Apology to Ajith Kumar s Mother

இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸ் விசாரணையின் போது போலீசார் கொடூரமாகத் தாக்கியதால் உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிபிசிஐடி வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது அது சிபிஐ வசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அஜித் குமார் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்து கொடுப்பார் என்றும், தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். அப்போது, அஜித்குமாரின் தாயார் மாலதியிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ரொம்ப, ரொம்ப சாரி மா" என தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் செயலைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில், "SORRY'மா... இந்த வார்த்தைகளை மொபைல் ஸ்பீக்கரில் கேட்டதும் நெகிழ்ந்தோர் பலர், கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் சொரிந்தோர் பலர்! என்னைப்போல கூடவே இருந்து பழகுகின்ற பெரும் வாய்ப்பைப்பெற்றவர்களுக்கு தெரியும், அந்த வார்த்தைகளின் ஆழமும், அதில் நெகிழ்ந்தோடும் ஈரமும். அவை சம்பிரதாய வார்த்தைகள் அல்ல. அதை நாங்கள் அறிவோம்.

அடடே... நல்ல சான்ஸ் எதிர்க்கட்சி மிஸ் பண்ணிடுச்சி என அரசியல் ஓநாய்கள் ஓலமிட்டன. அச்சச்சோ ஆட்சிக்கு அவப்பேராகுமே என சிலர் அவதிப்பட்டனர். யாரோ செய்த தவறுதானே, எனக்கென்ன என்று முதல்வர் இருக்கவில்லை; தட்டிக்கழிக்கவும் இல்லை. மூடி மறைக்கவும் இல்லை. அவர் நினைத்திருந்தால் என்னவெல்லாமோ செய்திருக்கலாம். வேறு யாராவது இந்த நாற்காலியில் இருந்திருந்தால் கையில் ஆட்சி, போலீஸ், இன்டெலிஜென்ஸ், அரசு இயந்திரம் என என்னவெல்லாமோ செய்திருப்பார்கள்.

ஆனால், இதுவரை யாரும் செய்யத் துணிந்திடாத ஒன்றைச் செய்து, "மாண்புமிகு" என உயர்ந்து நிற்கிறார் ஸ்டாலின். தனியொருவராக இந்த பிரச்சனையை மிகச் சரியாக ஒரு முதிர்ந்த அரசியல் ஆளுமையாக, தமிழ்நாடு அவர் மீது வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும் பாசதிற்கும் பாத்திரமாக, ஒரு 'அப்பா' வாக... ஒரே ஃபோன் கால் !

ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் மனசாட்சி உள்ள அனைவரும் நமது முதலமைச்சர் எப்படி பட்ட மகத்தான மனிதர் / தலைவர் என்பதை முழுமையாக புரிந்து கொண்டனர்.

"யாரோ செய்த தவறுக்கு இவர் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று பலர் என்னிடம் கேட்டனர்...யோசித்து பார்த்தேன்... பின்பு தெரிந்தது... ஏன்னென்றால் இவர் தலைமைப் பண்புகள் நிரம்பியுள்ள, மனசாட்சியுள்ள,
மக்களின் முழு நம்பிக்கையை பெற்றுள்ள ஒரே முதலமைச்சர். பதவியை பொறுப்பு என்று அழைக்கும் ஒரே முதலமைச்சர்.

ஆட்சி வரும் போகும் ஆனால் எந்நேரத்திலும் நியாயத்தின் பக்கம், ஜனநாயகத்தின் பாதுகாவலராக அடிப்படை உரிமைகளின் பக்கம், மனிதாபிமானத்தின் பக்கம், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் நின்றார் தமிழ்நாட்டின் முதலமைச்சர், எங்கள் பெருமைமிக்க தலைவர் ஸ்டாலின்.
'மாண்புமிகு' சொல்லல்ல செயல்!* தலைவர் மு.க.ஸ்டாலின் - வாழ்க ❤" என தனது பதிவில் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+