இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பல ஆயிரம் கோடி பொக்கிஷம்.. 300 வருடத்திற்கு பின் கடலில் கண்டுபிடிப்பு
சென்னை: 1721 ஆம் ஆண்டு பல ஆயிரம் கோடி பொருட்களோடு போர்ச்சுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. நோசா சென்ஹோரா டு கபோ என்ற இந்த கப்பல் போர்ச்சுகீசிய பேரரசுக்கு சொந்தமானதாகும். தற்போது 300 ஆண்டுகள் கழித்து இந்த கப்பலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தொல்லியல் ஆய்வாளர்கள் கடலுக்கு அடியில் இருந்து 300 ஆண்டுகள் பழமையான கப்பல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கப்பலில் 101 மில்லியன் பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் ரூ பல ஆயிரம் கோடி (தற்போது) மதிப்பிலான பணம், பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டு இருந்து இருக்கிறது.

300 ஆண்டுகளுக்கு முன்பு
இவை அனைத்தும் இந்தியாவில் இருந்து கொள்ளையடித்து சென்ற பணம் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். இந்தியாவுக்கும் இந்தக் கப்பலுக்கும் என்ன தொடர்பு, கப்பல் மூழ்கியதுஎப்படி என்பது குறித்த விஷயங்களை பார்க்கலாம். போர்ச்சுகீசிய நாட்டிற்கு சொந்தமான நோசா சென்ஹோரா டு கபோ சங் என்ற இந்த கப்பல் கோவாவில் இருந்து விலை மதிக்க முடியாத பொருட்களுடன் புறப்பட்டு சென்றுள்ளது.
1721 ஆம் ஆண்டு இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. இந்த கால கட்டத்தில் கோவாவை போர்ச்சுகீசியர்கள் ஆட்சி செய்தனர். இந்த கப்பல் போர்ச்சுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளது. ஒலிவர் டி பசார்டு லேவேஸ்சியர் என்பவர் தலைமையில் இந்த கப்பல் கொள்ளையடிப்பதற்காக தாக்கப்பட்டுள்ளது கடற்கொள்ளையர்களின் கொள்ளை முயற்சியில் மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
200 பேரின் கதி என்ன?
இந்த கப்பலில் இந்தியாவில் இருந்து 200 பேர் அடிமைகளாகவும் பல பில்லியன் மதிப்புடைய கரூவூல பொருட்களுடன் சென்றுள்ளது. இந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நிலையில், கப்பலில் பிடித்து செல்லப்பட்ட 200 பேரும் என்ன கதியானார்கள் என்பது இன்று வரை விலகாத மர்மமாகவே உள்ளது.
நோசா சென்ஹோரா டு கபோ என்ற இந்த கப்பல் போர்ச்சுகீசிய பேரரசுக்கு சொந்தமான கப்பல் ஆகும். பயங்கர ஆயுதங்களுடன் செல்லும் இந்தக் கப்பல் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது போர்ச்சுகீசிய பேரரசுக்கு பெரும் அவமானமாக அமைந்தது.
3,300 கலை பொருட்கள் மீட்பு
இந்தக் கப்பலின் எச்சங்கள் கடலில் படிந்து இருக்கலாம் என்பதால் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போதுதான், மடகாஸ்கர் அருகே உள்ள நோஸி போர்ஹா தீவின் அம்போடிஃபோட்டாட்ரா விரிகுடாவில் உள்ள கப்பல் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கப்பலின் இடிபாடுகளுக்குள் இருந்து 3,300 கலை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றில் மதம் சார்ந்த சிலைகள், தங்க கட்டிகள், முத்துக்கள், தங்க புதையல்கள் உள்ளிட்டவை அடங்கிய பெட்டிகளும் அடங்கும். இதில் உள்ள தகடு ஒன்றில் தங்க எழுத்துக்களில் 'INRI' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளது. இது லத்தீன் வார்த்தைகளான "ஐசஸ் நசரேனஸ் ரெக்ஸ் யூடேயோரம்" என்பதன் சுருக்கமாகும், இதன் பொருள் என்னவென்றால் "நாசரேத்தின் இயேசு, யூதர்களின் ராஜா" என்பதாகும்.
12 ஆயிரம் கோடி மதிப்பு
இந்தக கப்பலை ஆய்வு செய்த பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான பிராண்டன் ஏ. கிளிஃபோர்ட் மற்றும் மார்க் ஆர். அகோஸ்டினி கூறுகையில், "கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்த பிறகும் கூட ஒரு நம்பமுடியாத அளவுக்கு இது ஒரு பொக்கிஷம்" உள்ளது என்று கூறினார். இந்த சரக்கு கப்பல் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 12 ஆயிரம் கோடி மதிப்பு இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications