குழந்தையை பார்க்க வரும் "முன்னாள்" கணவரை.. விருந்தினரை போல மனைவி நடத்த வேண்டும்.. சென்னை ஹைகோர்ட்
சென்னை: விவகாரத்து மூலம் பிரிந்த கணவன்-மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில், குழந்தைகள் முன்பாக பெற்றோர்கள் வெறுப்பை காட்டக்கூடாது என்றும் விருந்தினரை தெய்வம் போல் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுவாக கணவன் -மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் விவாகரத்து உடனடியாக செய்துவிடுகின்றனர்.
அதிலும் ஒருசிலர் தங்களுக்கு குழந்தைகள் பிறந்த பின்னரும் உன்னோடு என்னால் வாழமுடியாது என கூறி விவாகரத்து செய்கின்றனர்.

பல்வேறு பிரச்சினை
பின்னர் அதோடு அவர்களது பிரச்சினை முடிந்துவிடும் என நினைப்பர். ஆனால் அவர்களது குழந்தைகளை பார்ப்பது தொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்படத்தான் செய்யும். அந்த மாதிரி குழைந்தைகளை பராமரிப்பது, படிக்க வைப்பது, பள்ளிக்கு அனுப்புவது, தன்னுடன் இருக்க வைப்பது என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இதில் கூடுதல் பிரச்சினை என்னவென்றால் தம்பதியின் குழந்தைகள் இந்த பிரச்சினைக்குள் பாதிக்கப்படுவது தான். இவர்களது விவாகரத்து பிரச்சினையில் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் வேதனை.

நீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில், இதுபோன்ற ஒரு தம்பதியினர் தங்களது 10 வயது பெண் குழந்தையை கூட்டாக பராமரிப்பது தொடர்பாக மகளின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனக்கசப்பால் பிரிந்து வாழும் பெற்றோர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார். அதில், தனிப்பட்ட இருவரின் புனிதமான சங்கம்தான் திருமணம். அதன் பலனாக கிடைக்கும் குழந்தையை, வளர்ப்பது பெற்றோர் ஆகிய உங்களின் கடைமை .

ஸ்னாக்ஸ், டின்னர் வழங்கி உபசரிக்க வேண்டும்
ஆனால், மனக்கசப்பால் பிரிந்ததால், பெற்றோருக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், குழந்தைகள் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர். எனவே பெற்றோர்கள் குழந்தைகள் முன்பாக வெறுப்பை உமிழ்வது குழந்தையின் மனநலனை பாதிக்கும். அது ஆபத்தாகவும் மாறிவிடும். எனவே குழந்தை முன்பாக நட்பாக பழகி ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். குழந்தையை சந்திக்க வரும் முன்னாள் கணவனுக்கு ஸ்னாக்ஸ், டின்னர் ஆகியவற்றை வழங்கி உபசரிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை இதை பார்த்து மகிழும். பெற்றோர்களுடன் கழிக்கும் நேரத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும்" என்றார். மேலும் மனுதாரரான குழந்தையின் தந்தை, ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 6 மணி முதல் 8 மணி வரை சந்திக்க அனுமதி அளித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிதி தேவா பவ...
விருந்தினரை தெய்வம் போல நடத்துவது(அதிதி தேவா பவ), முன்காலத்தில் நமது நாட்டின் பாரம்பரியம். எதிரி நாட்டு ஒற்றன் போர் அறிவிக்கும் ஓலையோடு வரும்போதும்கூட, அவனை உபசரித்து பாதுகாப்பாக வழியனுப்புவது நம் நாட்டின் பாரம்பரியம். பண்டைய கால சாலைகளில் சத்திரங்கள் மற்றும் திண்ணைகள் அமைத்தற்கு கூட காரணம் உண்டு. ஏனென்றால் அவ்வழியாக செல்லும் வழிப்போக்கர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக தான்.












Click it and Unblock the Notifications