சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுட்டெரிக்கும் திருச்சி.. 50 ஆண்டுகளிலேயே இதுதான் உச்சம்... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 50 ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலையாகத் திருச்சியில் இன்று105.44 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trichy at 40.8 C recorded its hottest March day in over 50 years says Tamilnadu Weatherman Pradeep John

தமிழ்நாட்டில் பொதுவாகவே வேலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக திருச்சியில் இரண்டு ஆறுகள் ஓடுவதால் மணல் பரப்பு அதிகமாக இருக்கும். இதனால் திருச்சியில் வெயிலின் தாக்கம் மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில், திருச்சியில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக இன்று 105.44 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி 105.08 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையும் 1991ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி 104.72 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

திருச்சியில் அதிகபட்சமாக 1892ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி 107.96 பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியிருந்ததாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tamilnadu Weatherman Pradeep John's latest tweet about hottest March day in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X