‘சிவப்பு நைட்டி’.. மீண்டும் சேட்டையை ஆரம்பித்த திருச்சி சாதனா! அப்ப மொதல்ல சொன்னது பொய்யா கோபால்..?
சென்னை : இனி இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாக பேசவோ, ஆடவோ மாட்டேன் என மன்னிப்பு வீடியோ வெளியிட்ட திருச்சி சாதனா, தற்போது மீண்டும் பல்வேறு ஆண்களுடனும் நடனமாடி, நைட்டியில் ஆபாசமான அசைவுகளுடன் வீடியோ வெளியிட்டு வருவதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் திருச்சி சாதனா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கொரோனா காலத்தில் அது தடை செய்யப்பட்ட பின்னர் ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் என வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.கடந்த சில நாட்களாக அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டதோடு, ஃபேஸ்புக் லைவ்வில் அரைகுறை ஆடைகளோடு, ஆபாசமாக பேசி தொடர்ச்சியாக வீடியோ போட்டு வந்தார்.

திருச்சி சாதனா
அதிலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி சாதனா ஆபாசமாக பேசிய யூட்யூப்பில் வெளியிட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றது. இந்த நிலையில் நச்சலூர் கிராம மக்கள் குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பினர்.அதில் தங்கள் கிராமத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஆபாச வீடியோக்களை வெளியிடும் சாதனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

மன்னிப்பு வீடியோ
இதனையடுத்து திருச்சி சாதனாவை குளித்தலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், விசாரணை நடத்தி தனிப்பட்ட முறையில் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். உடனே 'நான் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை வெளியிட மாட்டேன்' என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்த சாதனா, அதையே பேசி ஒரு வீடியோவாகவும் வெளியிட்டார். ஒரு சில நாட்கள் அமைதியாக இருந்த அவர் மீண்டும் சேலை கட்டி டீசண்டாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
மீண்டும் சேட்டை
இந்நிலையில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக இன்ஸ்டாகிராமில் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளார் திருச்சி சாதனா. 80'ஸ் காலகட்டங்களில் வெளியான இரட்டை அர்த்த வசனம் உள்ள பாடல்களுக்கு நைட்டியுடன் ஆபாச நடன அசைவுகளுடன் நடனம் ஆடுவது என மீண்டும் சேட்டையை துவக்கியுள்ளார். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணுடன் டூயட் என்ற பெயரில் அட்ராசிட்டி செய்துவரும் திருச்சி சாதனாவின் கமெண்ட் செக்சனில் கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வலுக்கும் கண்டனம்
லைவ் வீடியோக்களில் வரும் கமெண்டுகளுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து கெட்ட வார்த்தைகளில் பேசிய சாதனா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் எப்படி குளிக்க வேண்டும் என சில ஆடைகளுடன் குளிக்கும் வீடியோவை போட்டு சர்ச்சையில் சிக்கினார். கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த திருச்சி சாதனா தற்போது, இன்ஸ்டாகிராமில் சேட்டையை ஆரம்பித்து வரும் நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications