குட்நியூஸ்.. திருச்சி, சேலம், நெல்லைக்கு மெட்ரோ ரயில்.. முடியப்போகும் சாத்தியக்கூறு ஆய்வு பணி!ஆஹா
தமிழ்நாட்டில் சென்னையைக்கு அடுத்ததாக கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதற்கு அடுத்த படியாக மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் திருச்சி, சேலம், திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்தும் திட்டம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. முதற்கட்டமாக விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.
சென்னையில் நிரம்பி வழியும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் மெட்ரோ ரயிலை ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தான் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில்
இதுதவிர சென்னையில் தற்போது 2ம் கட்ட மெட்ரோ பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை எதிர்காலத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.

மதுரை மெட்ரோ ரயில்
இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது சுறுசுறுப்படைந்துள்ளன. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் திட்டத்துக்கான விரிவான தடி்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஐயில் கேள்வி
இந்நிலையில் தான் கோவை, மதுரையை தொடர்ந்து தமிழ்நாட்டில் திருச்சி, சேலம், திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வரும் நோக்கத்தில் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஆர்டிஐ எனும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

சேலம் மெட்ரோ ரயில் நிலை?
அதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛சேலம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி நடந்து வருகிறது. ஏப்ரல் இறுதிக்குள் இந்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். அதன்பிறகு அரசிடம் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும். அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, நெல்லை நிலவரம்
அதேபோல் திருச்சி, திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications