இடைவிடாமல் அண்ணாமலையை விமர்சிக்கும் நடிகை காயத்ரி.. சளைக்காமல் பதிலடி தரும் திருச்சி சூர்யா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட நிலையிலும் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை இடைவிடாமல் நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து வருகிறார். அண்ணாமலைக்கு எதிரான காயத்ரியின் ஒவ்வொரு பதிவுக்கும் பாஜகவில் இருந்து வெளியேறிய திருச்சி சூர்யா பதிலடியும் கொடுத்து கொண்டே இருக்கிறார்.

திருச்சி சூர்யா- பாஜக நிர்வாகி டெய்ஸி ஆபாச பேச்சு ஆடியோ சர்ச்சையில் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் நடிகை காயத்ரி. ஆனாலும் தமிழ்நாடு பாஜக தலைமையை இடைவிடாமல் விமர்சித்தார் காயத்ரி. இதனால் தமிழ்நாடு பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் நடிகை காயத்ரி.

Trichy Suriya Shiva condemns Gayathri Raguramm tweets against Annamalai

தமிழ்நாடு பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும் சமூக வலைதளங்களில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையை பெயரை குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் வீடியோ பதிவுகளை பகிர்ந்தும் என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் நடிகை காயத்ரி ரகுராம். அண்ணாமலையின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், காயத்ரி ரகுராம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் வெளியில் இருந்து குரைப்பவர்களுக்கு பதில் சொல்ல தேவை இல்லை என தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேட்டியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காயத்ரி ரகுராம், அன்புள்ள கர்நாடக வளர்ப்பு மகனே, பத்திரிக்கையாளர்கள் என் பெயரை சொன்னால் மட்டும் நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் அல்லது பயப்படுகிறீர்கள்? ஏன் மனப் பதற்றம் படபடப்பு? ஏன் கண்ணா சிரித்த முகத்துடன் எனக்கு வாழ்த்த வேண்டாமா? எனக்கு தெரியும் உன் வண்டவாளம் தண்டவாளம் அதனால் நீ பயப்படுகிறாய் என ஒருமையில் விமர்சித்துள்ளார்.

இதற்கும் திருச்சி சூர்யா அளித்துள்ள பதில்: பைத்தியம் என்றால் அவருக்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கும்.சிரிச்சுகிட்டே வேற வாழ்த்தணுமாம் உன் மூஞ்சிக்கு இதுவே ஜாஸ்தி. அண்ணா உனக்கு தப்பா வாழ்த்து சொல்லிட்டாரு இப்பயாச்சும் நல்ல மனநல மருத்துவரை பார்த்து நல்லா இருக்கட்டும்னு சொல்லி இருக்கணும். இவ்வாறு திருச்சி சூர்யா கூறியிருக்கிறார்.

 Trichy Suriya Shiva condemns Gayathri Raguramm tweets against Annamalai

முன்னதாக 5மில்லியன் 10 மில்லியன் சப்ஸ்க்ரைபர் இருந்தா தான் பேட்டி கொடுப்பேன் என்று சொல்லும் கர்நாடக வளர்ப்பு மகன் ஈரோட்டில் போட்டியிட்டு 20,000 ஓட்டு வாங்க பெற முடியுமா? டெபாசிட் வாங்கினா நான் அரசியல் பேசுவதை நிறுத்திவிடுகிறேன். என்ன கர்நாடக வளர்ப்பு மகன் தயாரா? என்றும் அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன்.. இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது. எச்சரிக்கை காரியகர்த்தாக்கள் என்றும் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்து வருகிறார் நடிகை காயத்ரி ரகுராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+