Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரிச்சியூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்டேனா? இந்த ஆடியோவை கேளுங்க? அப்போ தெரியும்! திருச்சி சூர்யா

வரிச்சியூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை, அவர்தான் மன்னிப்பு கேட்டார்- ஆதாரத்துடன் திருச்சி சூர்யா சிவா பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரிச்சியூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்டேனா? என கேட்டு ஆடியோ வெளியிட்டு திருச்சி சூர்யா சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரிச்சியூர் செல்வம் ஹெல்மெட் அணியாமல் ஆர்ஆர்ஆர், கேஎப்ஜி பின்னணி இசையில் வாகனம் ஓட்டும் காட்சிகள் வைரலாகின. அவர் ஹெல்மெட் அணியாததால் அவர் மீது மதுரை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இது தொடர்பாக வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் என்னை யாரும் ரவுடி என அழைக்க வேண்டாம். நான் என்ன பொது மக்களை மிரட்டி 1000 கொடு, 2000 கொடுனு கேட்கிறேனா ஏன் என்னை பற்றி அப்படி போடுகிறீர்கள்.

ஜோக்கர்

ஜோக்கர்

என்னை ஜோக்கர் என போட்டால் கூட நான் சந்தோஷப்படுவேன். நான் நகை அணிந்து கொள்வதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. நான் நகை அணியாவிட்டால் என்னை யாரும் மதிக்க மாட்டார்கள். எனது அடையாளம் நகைதான். விமர்சனங்கள் வந்தாலும் வரிச்சியூர் செல்வம் இப்படித்தான் இருப்பேன். என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன். தூங்கும் போது நகையை கழற்றி வைத்துவிட்டுத்தான் தூங்குவேன்.

விமான பயணம்

விமான பயணம்

விமானத்தில் பயணித்தாலும் நகைகளுடன்தான் பயணிப்பேன். உள்ளே போனாலும் நான் நகைகளை கழற்ற மாட்டேன். நான்தான் வரி கட்டிக் கொண்டிருக்கிறேனே எதற்காக நகைகளை கழற்ற வேண்டும்? நான்என் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன். நான் போட்டிருக்கும் நகைகளை குத்துமதிப்பாக ரூ 1.25 கோடிக்கு மேல் போகும். என்னை அடித்து போட்டுவிட்டு நகைகளை எடுத்துச் செல்லலாம். ஆனால் யாரும் என்னிடம் வரவில்லை. வந்தால் எதற்கு வீண் வம்பு என நகைகளை கொடுத்துவிட்டு போய்விடுவேன் என கூறியிருந்தார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இந்த நிலையில் வரிச்சியூர் செல்வம் திடீரென காயத்ரி ரகுராம் குறித்து பேசியிருந்தார். அதில் காயத்ரி ரகுராம், மாஸ்டர் கணேஷ் உள்பட 5, 6 பேர் மதுரையில் ஒரு பிரபல ஹோட்டலுக்கு சாப்பிட வந்தனர். அப்போது நானும் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் காயத்ரி ரகுராம் போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த போட்டோவை திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

திருச்சி சூர்யா

திருச்சி சூர்யா

உடனே திருச்சி சூர்யாவுக்கு நான் போன் போட்டு என்னப்பா இப்படிலாம் போடலாமா, அவங்க யாருன்னே தெரியாது, ஓட்டலுக்கு சாப்பிட வந்த போது நான் வித்தியாசமாக இருப்பதால் என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இது ஒரு குற்றமா, இப்படியெல்லாம் போடலாமா என கேட்டேன். உடனே அவரும் அண்ணே சாரிண்ணே என தெரிவித்தார். காயத்ரி ரகுராமை என் வாழ்க்கையில் அன்றுதான் பார்த்தேன். அதுவரை அவர் யாரென்றே எனக்கு தெரியாது என கூறியிருந்தார்.

வரிச்சியூர் செல்வம்

வரிச்சியூர் செல்வம்

இந்த நிலையில் வரிச்சியூர் செல்வத்திடம் திருச்சி சூர்யா சிவா மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதை திருச்சி சூர்யா சிவா மறுத்துள்ளார். அவர் கூறுகையில் எனது ட்விட்டரில் வரிச்சியூர் செல்வமும் காயத்ரி ரகுராமும் இரவு நேரத்தில் ஒரு தோப்பில் சந்தித்ததாக நான் போட்டிருந்தேன். இது தொடர்பாக எந்த செய்தியாளரும் வரிச்சியூர் செல்வத்திடம் கேட்கவில்லை. அவராகவே சூர்யா சிவா தன்னிடம் பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த புகைப்படத்தை எடுத்து விட்டார் என கூறியிருந்தார்.

2 நாட்களாக மன்னிப்பு கேட்டதாக செய்தி

2 நாட்களாக மன்னிப்பு கேட்டதாக செய்தி

இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக வரிச்சியூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வந்தன. அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை, ஆனால் பேட்டி கொடுத்த இரு நாட்களுக்கு பிறகு அவர் எனக்கு ஒரு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில் செய்தியாளர் சந்திப்பில் "நீங்கள்(சூர்யா சிவா) மன்னிப்பு கேட்டதாக தெரியாமல் கூறிவிட்டேன், மன்னிப்பு விடுங்கள்" என கூறியிருந்தார்.

அவர்தான் மன்னிப்பு கேட்டார்

அவர்தான் மன்னிப்பு கேட்டார்

எனவே நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என கூறி அந்த ஆடியோவையும் திருச்சி சூர்யா வெளியிட்டிருந்தார். பாஜகவில் நான் ராஜினாமா கடிதம் கொடுத்ததில் இருந்து திமுக எதிர்ப்புகளை நான் பதிவு செய்து வருகிறேன். நான் திமுகவில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. நான் இன்று வரை பாஜக பிரமுகராக தொடர்கிறேன். எனது ராஜினாமாவை பாஜக தலைமை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. 2026 ஆம் ஆண்டு வரை அண்ணாமலை பாஜக தலைவராக இருப்பார். அப்போது தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும், முதல்வர் நாற்காலியில் அண்ணாமலை உட்காருவார் என திருச்சி சூர்யா சிவா தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+