அப்ப நீங்களும் அந்த கம்பெனியில் இருந்து பணம் வாங்கினீர்களா?.. கனிமொழிக்கு திருச்சி சூர்யா கேள்வி
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்காக பிரச்சாரம் செய்தபோது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் துப்பாக்கிச் சூட்டை பற்றி மட்டும் எந்த இடத்திலும் பரப்புரை செய்ய வேண்டாம் என்று நீங்கள் என்னிடம் கூறியது ஏன் என திருச்சி சூர்யா கனிமொழி எம்பியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
எண்ணித் துணிக நிகழ்ச்சியில் "வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் (FCR Act), பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் மாநிலத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து சில மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் பதில் அளித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி கூறுகையில், "வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை ஒரு தனி நபரோ, தொண்டு நிறுவனமோ நன்கொடையாக பெறுகிறது. அது ஒருமுறை என்றால் பிரச்சனை இல்லை. தொடர்ந்து அத்தகைய நன்கொடை வருமானால், அங்கு எஃப்சிஆர்ஏ எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் வரும்.

கூடங்குளம்
இந்த சட்டம் மூலம் அனைத்து வெளிநாட்டு நன்கொடை வரவும் உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வரும். இப்படி வரும் நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில நிறுவனங்கள் தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக தென் மாவட்டத்தில் அணுஉலை திட்டத்துக்கான வேலை தொடங்கும் போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்ற தாக்கம், வெடிப்பு, மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் சொல்லி போராட்டங்கள் வெடித்தன. யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது தெரியவந்தது.
விழிஞ்சம் துறைமுகம்
வடகிழக்கு மாநிலங்களில் சிலர் போலி நிறுவனங்களை வெளிநாடுகளில் ஆரம்பித்து ரூ. 200 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி பெற்று இந்தியாவில் மதமாற்றத்துக்காக பயன்படுத்தினர். இதுபோன்ற தேச நலனை பாதிக்கும் விவகாரங்களில் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. கேரளாவின் விழிஞ்சம் துறைமுக திட்டம் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற மிகப்பெரிய மனித உரிமை அமைப்பின் இடையூறால் ஓராண்டுக்கும் மேல் தடைபட்டது. பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், அரசு அனைத்தும் திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லியும் அதை நிறைவேற்ற முடியவில்லை. இந்த ஆம்னெஸ்டி அமைப்பு குறித்து விசாரணை நடத்தியபோது அதற்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்துள்ளது. துரதிருஷ்டவசமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியானது கவலைக்குரிய விஷயம். இந்திய தேவையில் 40% தாமிரத்தை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்தது. அது மூடப்பட்டதால் இந்தியாவின் தாமிர தேவை பாதிக்கப்பட்டது. இந்தியாவின் மின்னணு உற்பத்திக்கு முக்கிய தேவை தாமிரம். அதன் உற்பத்தியை முடக்கும் பின்னணியில் இருந்தவர்கள் அந்நிய நிதியை பெற்றது தெரியவந்துள்ளது" என ஆளுநர் ரவி கூறினார்.
கனிமொழி எம்பி கேள்வி
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்பி திருச்சி சிவா, அதிமுகவில் இருந்து கேபி முனுசாமி உள்பட பலரும் ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கனிமொழி எம்பி கூறும் போது, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பேசியதற்கு ஆதாரங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தரவேண்டும்; மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரைக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
திருச்சி சூர்யா பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "ஆட்சியை கையில் வைத்திருக்கும் நீங்கள்,ஆளுநர் ஏன் ஆதாரங்கள் தர வேண்டும். தங்களுக்காக திமுகவில் அப்பொழுது பயணித்த நான் பாராளுமன்றத் தேர்தலில் உங்களுக்காக பிரச்சாரம் செய்தபோது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் துப்பாக்கிச் சூட்டை பற்றி மட்டும் எந்த இடத்திலும் பரப்புரை செய்ய வேண்டாம் என்று தாங்கள் எனக்கு கட்டளையிட்டதற்கான காரணம் என்ன? நீங்களும் அந்த கம்பெனியில் இருந்து பணம் வாங்கினீர்களா? அதிமுகவின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை ஏன் பரப்புரையில் கூற வேண்டாம் என்று கூறினீர்கள்.. அதற்கு உண்டான பதிலை கூறவும்" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications