திருச்சி சிவா வேண்டாம்! திரிணாமுல் கடைசி நேரத்தில் சொன்ன பாயிண்டு! சுதர்சன் ரெட்டி தேர்வானது எப்படி?
சென்னை: துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் "இந்தியா" எதிர்க்கட்சி வேட்பாளராக திருச்சி சிவா (Trichy Siva) அறிவிக்கப்படலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் அது மாறியது. சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆலோசனையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், திமுகவுக்கு செக் வைக்கும் வகையிலேயே சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

சுதர்சன் ரெட்டி
இதற்குப் பதிலடியாக திருச்சி சிவாவை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக அறிவிக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அவர் அறிவிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற மாஜி நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடைசி நேரத்தில் திருச்சி சிவாவுக்கு பதிலாக சுதர்சன் ரெட்டி தேர்வானது எப்படி.. என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது திரிணாமுல் காங்கிரஸ் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.. நாட்டின் இரண்டாவது பெரிய அரசியலமைப்புப் பதவிக்கு அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளது. மேலும், 'தமிழன் vs தமிழன்' என்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திரிணாமுல் கூறியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ்
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜகதீப் தன்கரை பாஜக வேட்பாளராக அறிவித்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் வேட்பாளரைத் தீர்மானிக்கும் செயல்முறை குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் வாக்களிக்காமல் புறக்கணித்தது.
ஆனால் இந்த முறை, திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ'பிரையன் இந்தக் கூட்டங்களில் பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சில முக்கிய கருத்துகளை முன்வைத்து இருக்கிறது.
அரசியல்வாதி வேண்டாம்
திமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான திருச்சி சிவா பெயர் முதலில் பரிசீலிக்கப்பட்டது. இருப்பினும், அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது. இதையடுத்து அப்போது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி அண்ணாதுரையின் பெயரும் கூட பரிசீலனை செய்யப்பட்டதாம். இருப்பினும், அப்போதும் திரிணாமுல் காங்கிரஸே இதை எதிர்த்துள்ளது.
தமிழன் vs தமிழன்
தமிழன் vs தமிழன் என்ற போட்டியைத் தவிர்க்குமாறு திரிணாமுல் காங்கிரஸின் ஓ'பிரையன் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் இந்தக் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை ஒரு சித்தாந்தப் போட்டியாக அணுக வேண்டும் என்பதே திரிணாமுல் காங்கிரஸின் வாதமாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் தான் தீவிர ஆலோசனைக்குப் பிறகு சுதர்சன் ரெட்டியை எதிர்க்கட்சியினர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்து திமுகவுக்கு பாஜக செக் வைக்க முயன்றது. அதற்குத் தக்கப் பதிலடியாகவே "இந்தியா" கூட்டணி சுதர்சன் ரெட்டியை அறிவித்துள்ளது.
பாஜக கூட்டணி கட்சிகளுக்கு செக்
சுதர்சன் ரெட்டியை ஒருங்கிணைந்த ஆந்திரா வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டணி அரசு நடக்கிறது. சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் பாஜக கூட்டணியில் இருந்தாலும் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்ற முறையில் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கும். அதேபோல ஆந்திராவில் தனித்து இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் பிஆர்எஸ் ஆகிய கட்சிகளும் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
திரிணாமுல் கட்சி சொன்ன சில பாயிண்டுகளால் தமிழன் vs தமிழன் என்பது மாறி, பாஜகவுக்கு செக் வைக்கும் வகையில் ஆந்திராவில் இருந்து ஒருவரை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக அறிவித்துள்ளது.
-
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications