வாழைபழம் மாதிரி பேசுவா மேடம்..இன்ஸ்டாவில் ரிச் லுக்! பார்த்ததோ பலான வேலை..பாயல் தாஸின் பகீர் பின்னணி
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் போதை பொருள், கஞ்சா உள்ளிட்டவை பிடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளைஞர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியதாக திரிபுராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் அதிக அளவிலான கஞ்சா புழக்கம் இருப்பதாக குற்றஞ் சாட்டப்படுகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையான நிலையில் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் சாலைகளிலும் அடிக்கடி வாகன சோதனை மூலம் கஞ்சா, போதை பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை பல்லாவரம் அருகே திரிசூலம் ரயில்வே கேட் பகுதியில் பல்லாவரம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வகையில் பெண் ஒருவர் பெரிய பையோடு சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து சந்தேகம் அடைந்த அந்த போலீசார் அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணின் பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் பாயல் தாஸ் என்பதும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. திருமணமாகி குழந்தையோடு வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் கஞ்சாவை திரிபுராவிலிருந்து ரயில் மூலம் கடத்தி வந்து இன்ஸ்டாகிராமில் நண்பர்கள் மூலம் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் ஐடி ஊழியர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் 3 வருடங்களாக அவர் கஞ்சா விற்பனை செய்து வந்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் இளம் பெண் போல போஸ்ட்டுகள் ரீல்ஸ்கள் போட்டு அதன் மூலம் பேச வரும் நபர்களிடம் பணம் சம்பாதிக்கும் ஆசை மற்றும் காதலிப்பதாக கூறி அவர்களை ஏமாற்றி இருக்கிறார். மேலும் அதிக பணம் தேவை என்பதால் கஞ்சா விற்பனை செய்தால் நிறைய பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர்களை சேர்த்து அவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்திருக்கிறார். திரிபுராவில் 5000 ரூபாய்க்கு வாங்கிய கஞ்சாவை சென்னையில் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்றிருக்கிறார்.
அதன் மூலம் விலை உயர்ந்த செல்போன்கள், விலை உயர்ந்த ஆடைகள் உள்ளிட்டவற்றை வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போதைப் பொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பாயலுடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த நபர்கள் குறித்தும் போலீசார் தனியாக விசாரித்து வருகின்றனர். மூன்று வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர்களை சேர்த்து அதன் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications