ட்ரம்ப்தான் அதிபர்.. 2 வாரம் முன்பே சொன்னது எப்படி? ஜெகத் கஸ்பர் உடைத்த ரகசியம்
சென்னை: உலகமே கமலா ஹாரிஸ்தான் அமெரிக்காவின் அதிபராக வருவார் என ஆருடம் கூறிக் கொண்டிருந்ததற்கு எதிராக மீண்டும் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதற்கான காரணம் என்ன? கமலா ஹாரிஸ் கோட்டைவிட்டது எங்கே?
அமெரிக்காவின் 47 அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகள் தேவை எனும்போது டொனால்ட் டிரம்ப் 295 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி மொத்தம் 7,26,15,305 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது 50.9% வாக்குகள். அதேநேரம் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரில் 226 எலக்ட்ரல் வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 6,79,19,116 ஆகும்.

சர்வதேச ஊடகங்கள் பலவும் கமலா ஹாரிசுக்கு மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுத்தன. அந்தவகையில் பார்த்தால் ட்ரம்ப் அதிகமாகவே மட்டம் தட்டப்பட்டார். இந்தளவுக்கு ஊடக ஹைப் இருந்த போது ஃபாதர் ஜெகத் கஸ்பர் 2 வாரங்கள் முன்பே ட்ரம்ப்தான் அடுத்த அதிபர் என அடித்துக் கூறியிருந்தார். அவர் கணிப்பு உறுதியாகி இருக்கிறது. இதை அவர் எப்படிக் கணித்தார்? அதன் ரசிகியம் என்ன? அவர் அளித்துள்ள விளக்கத்தில், "கடந்த 20க்கும் மேலான அமெரிக்க அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அமெரிக்காவின் அதிபராகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்தான் அமரப் போகிறார்.
அமெரிக்க காங்கிரஸ் அவையிலும் குடியரசு கட்சிதான் கட்டுப்படுத்தும் போல் தெரிகிறது. வல்லமை மிக்க செனட் அவையும் இதே கட்சிதான் கட்டுப்படுத்த போகின்றது. கிட்டத்தட்ட ஜனநாயகத்திற்கு எதிராக ஒரு சர்வாதிகாரம் தலைதூக்கும் போக்கு காணப்படுகிறது. ஆகவே, அமெரிக்காவைப் பொறுத்தவரைத் தனித்துவமான தேர்தலாகவே அமைந்துள்ளது. இந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெகுமக்கள் வாக்கையும் வென்றிருக்கிறார். Electoral college வாக்குகளிலும் அவர் பெற்றிருக்கிறார். இவை அனைத்து முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விசயங்கள்.
அடுத்ததாக என் கணிப்பு பற்றி விசயத்திற்கு வருவோம். கடந்த 2 வாரங்கள் முன்பே நான் ட்ரம்ப்தான் வெற்றி பெறுவார் என உறுதியாகக் கூறி இருந்தேன். வெறும் தேர்தல் வெற்றியை மட்டும் நான் கணிக்கவில்லை. காங்கிரஸ் அவை, செனட் அவை, அதிபர் பதவி இந்த மூன்றையும் ஒரே கட்சிதான் கட்டுப்படுத்த போகிறது என்பதையும் கணித்துச் சொல்லி இருந்தேன்.
இந்தத் தேர்தல் கணிப்பைப் பொறுத்தவரை மாடல் இருக்கிறது. தரவுகளின் அடிப்படையில் கணிப்பது என்பதும் ஒன்று. சுமார் 10 ஆயிரம் மாதிரிகளை எடுத்து அதை வைத்துக் கணிப்பது. வெவ்வேறு வயதினர் சார்ந்து, நிலப்பரப்பு சார்ந்து, தொழில்கள் சார்ந்து ஒரு குறிப்பிட்ட தரவுகளை எடுத்து அதை வைத்துக் கணித்துச் சொல்வது. Qualitative sample என்று ஒரு வகை கணிப்பு இருக்கிறது. இப்படி தேர்தலைக் கணிக்க சில மாடல்கள் இருக்கின்றன.
நான் அமெரிக்கா போய் கருத்து கணிப்பை நடத்த முடியாது. இந்தியாவிலிருந்தபடி ஒரு கணிப்பை எப்படி நடத்தலாம் என்ற வழியை மேற்கொண்டேன். தேர்தல் பிரச்சார களம் கமலா ஹாரிஸுக்கு சாதகமாக இருந்தது. அதேநேரம் அடித் தட்டில் அரசியல் அழுத்தம் எப்படி இருக்கிறது? என இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டேன். அமெரிக்க Under current காரணிகள் ட்ரம்புக்கு சாதகமாக இருந்தன.
கேலப் என்ற ஒரு நிறுவனம் அமெரிக்கத் தேர்தல் வெற்றியை முடிவு செய்யப் போகிற காரணங்கள் என 20 விசயங்களைப் பட்டியல் போட்டிருந்தது. அதில் 58% மக்கள் அமெரிக்கப் பொருளாதாரம் முக்கியம் என்று சொல்லி இருந்தார்கள். 38% மிகமிக முக்கியம் என கூறியிருந்தனர். ஆக, 90% மக்கள் பொருளாதார பிரச்சினையை முதன்மையானதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதைச் சரியாகக் கையாளக் கூடிய திறமை ட்ரம்புக்குதான் இருக்கிறது என 52% பேர் கூறி இருந்தனர்.
அடுத்ததாக சட்டவிரோதமான குடியேற்றம் பெரிய தலைவலியாக இருந்தது. கருக்கலைப்பும் ஒரு சிக்கலாக இருக்கிறது என சர்வே சொன்னது. பலரும் கருக்கலைப்பு பெரிய சர்ச்சையாக முன்வைத்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 1கோடி சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியுள்ளனர். மெக்சிகோவிலிருந்து மட்டுமே 23 லட்சம் பேர் வந்துள்ளனர். குஜராத்திலிருந்து 3 லட்சம் பேர் சென்றுள்ளனர். இது ஒரு பிரதானமான பிரச்சினை. கருக்கலைப்பு இதனுடன் ஒப்பிடும்போது ஒரு சிக்கலாக இல்லை. இதில் ட்ரம்ப் சட்டவிரோத குடியேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு நாட்டின் சொந்த குடிமகனாக அவரது நிலைப்பாட்டை மக்கள் ஆதரித்துள்ளனர்.

அமெரிக்கர் ஒருவருக்கு 10 டாலர் சம்பளம் தரவேண்டும் என்றால் சட்டவிரோதமாகக் குடியேறி தொழிலாளிக்கு 5 டாலர் கொடுத்தால் போதும். இதனால் நாட்டின் பிரஜைகள் வேலையை அதிகம் இழக்க நேரிடுகிறது. மேலும் ட்ரம்ப் தான் வெற்றி பெற்று அதிபரானால் அடுத்த நாட்டுக்காக அமெரிக்கா போர் செய்யாது என உறுதி அளித்தார். நம் நாட்டை வளர்ப்பதுதான் என் வேலை என்றார். இது சராசரி அமெரிக்க வர்க்கத்திடம் போய்ச் சேர்ந்துள்ளது. ரஷ்யாவைப் பகை நாடு அல்ல. அது போட்டி நாடு என்று தெளிவை கொடுத்தார்.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. அதில் 18 மாநிலங்கள் எப்போதும் ஜனநாயகக் கட்சிக்குத்தான் ஆதரவாக இருக்கும். இதேபோல 22 மாநிலங்கள் எப்போதுமே குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கும். மீதமுள்ள 8 அல்லது 10 மாநிலங்கள்தான் சண்டைக் களமாகக் காணப்படும். ஊடாட்டத்தில் உள்ள இந்த மாநிலங்கள்தான் வெற்றியை தீர்மானிக்கின்றன. இந்த மாநிலங்கள் யாரும் முற்போக்கான பொருளாதார கொள்கையைப் பின்பற்றுகின்றன.
பில்லியன் கணக்கில் பணம் ஈட்டுவது மட்டும் அல்ல. தங்களின் நீடித்த பாரம்பரிய பொருளாதார பண்புகளைக் காப்பாற்ற நினைப்பவை. ஆகவே, இந்த மாநிலங்கள் ட்ரம்ப்பை ஆதரித்தன. ஊடகங்கள் பலவும் ட்ரம்ப்பை எதிர்த்தன. அதற்குக் காரணம் கட்டுப்பாடு அற்ற பொருளாதாரத்திற்கு ட்ரம்ப் எதிராக உள்ளார்.
அவர் வந்தால் அந்தத் தொழிலதிபர்களுக்கு ஆபத்து. எனவே ட்ரம்ப்பை மட்டம் தட்டி செய்திகளை, கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இத்தைதான் முன்கூட்டியே உணர்ந்தேன். அதை வைத்தே என் கணிப்பை வழிநடத்தினேன். கிட்டத்தட்ட 80 வயதை நெருங்கப் போகும் ஒருவரை அதற்காகவே தேர்வு செய்துள்ளனர். அவர் மீது அத்தனை வழக்குகள் உள்ளன. அதை மீறி அவர் வென்றுள்ளார். அதற்குக் காரணம் அவர் முன்வைத்த விசயங்கள். எடுத்த நிலைப்பாடுகள். அதைக் கொண்டே நான் அவர் வருவார் என யூகித்துச் சொன்னேன்" என்கிறார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications