கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்.. துச்சமாக நினைத்தால் வீழ்வார்கள்- ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை
சென்னை: அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் என ஓபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் ஜூலை 11 இல் நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் ஓபிஎஸ் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தர்மத்தை நம்பினேன், மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன். கழகத்தை உயிராக நேசிக்கும் கழக கண்மணிகளை தொண்டர்களை நம்பினேன்.

உண்மை தர்மம்
உண்மையும் தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன். இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசிகளை நம்பினேன்.

அரசியல் கட்சி
இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது. அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் அடாவடியாக சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும் தர்மமும் தொண்டர்களும் பொதுமக்களும் குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது.

எம்ஜிஆர் வகுத்தெடுத்த விதிகள்
கழக நிறுவனர் எம்ஜிஆர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.

எம்ஜிஆர் மந்திரம்
"தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே"
என்னும் எம்ஜிஆரின் திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று, கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் என்றைக்கும் ஜெயலலிதாதான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி!












Click it and Unblock the Notifications