Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருத்தணி முருகா, பழனி மலை ஆண்டவா.. அறுபடை வீடு இலவச ஆன்மீக சுற்றுலா.. தமிழக அரசின் பெரிய சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறுபடை வீடு இலவச ஆன்மீக பயணம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூலம் 2024 2025ம் நிதியாண்டில் அரசு நிதியில் 2,022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான கோயில்களை கொண்ட தமிழகத்தை, ஆன்மிக பூமி என்பார்கள்.. எனவேதான், பக்தர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அளவுக்கு தமிழக அறநிலையத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கோயில்களில் குடமுழுக்கு, அன்னதானம் திட்டம், கோயில் நிலங்களை மீட்பது போன்ற செயல்பாடுகளை செய்து வருகிறது.

ஆன்மீக சுற்றுலா

மற்றொருபுறம், பக்தர்களை சுற்றுலா அழைத்து செல்கிறது.. அறுபடை வீடு சுற்றுலா , அம்மன் கோயில் சுற்றுலா, பெருமாள் கோயில் ஒரு நாள் சுற்றுலா, ராமேஸ்வரம்- காசி சுற்றுலா போன்ற திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுபோன்ற ஆன்மீக சுற்றலாவுக்கு, பக்தர்களிடம் வெகு சிறப்பான வரவேற்பும் கிடைத்து வருகிறது.

tiruttani aarupadai veedu tour tn gov

அந்தவகையில், சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூலம் 2024-2025 ஆம் நிதியாண்டில் அரசு நிதியில் 2022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

முருகனின் அறுபடை வீடு

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் இதுவரை 1.822 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (04.03.2025) கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் திருத்தணி. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிருந்து சுவாமி தரிசனம் செய்து அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

போர்வை, துண்டு, சோப், பேஸ்ட், கண்ணாடி

இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு. குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் அறநிலையத்துறை சார்பாக வழங்கப்படுகின்றன.

மேலும், பக்தர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற மூத்த குடிமக்கள் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூலம் 2024-2025 ஆம் நிதியாண்டில் அரசு நிதியில் 2,022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர்" என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

அறுபடை வீடு பயணத்திற்கு விண்ணப்பிக்க தகுதி :

- இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

- 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

- பக்தரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்க வேண்டும்.

- பக்தர்கள் ஒரு முறை மட்டுமே இந்த பயணத்தில் கலந்து கொள்ள முடியும்.

- குழந்தைகளை அழைத்து வர அனுமதி கிடையாது.

- ஆன்மீக பயணம் செல்லும் நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் அனைத்தையும் பக்தர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

அறுபடை வீடு இலவச ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கும் முறை

- அறுபடை வீடு இலவச ஆன்மிக பயணத்திற்கான விண்ணப்பங்களை அருகிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலங்களில் பெறலாம் அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து அறிநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கும் சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

- பெயர், வயது, மொபைல் எண், ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும்.

- - வயது சான்றிதழ், இந்து மதத்தை சார்ந்தவர் என்பதற்கு பள்ளி சான்றிதழ், இருப்பிட முகவரி சான்று, ஆதார் அட்டை நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, நான்கு நாள் பயணத்திற்கான மருத்துவரிடம் உடல் தகுதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

- இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட்டதும் அவை சரி பார்க்கப்பட்டு, பயணம் செய்வதற்கான தேதி உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+