"ஏன்பா.. வர சொன்னா வெறுங்கைய வீசிட்டா வருவ.." புரியாமல் விழித்த டிடிஎப் வாசன்.. நொந்துபோன போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாமீனில் வெளியே வந்துள்ள டிடிஎப் வாசன், கையெழுத்துப் போட போலீஸ் நிலையம் சென்ற போது அங்கு நடந்த கமெடி களேபரங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருந்த யூடியூபர்கள் என்றால் அது டிடிஎஃப் வாசன் தான். அதிலும் குறிப்பாக இந்த 2கே கிட்ஸ் மத்தியில் டிடிஎஃப் வாசனுக்கு எப்போதும் மவுசு அதிகம்.

TTF Vasan failed to bring proper documents when he visited Police station

சாலைகளில் அதிவேகமாக பைக்கை இயக்கும் டிடிஎப் வாசன், அதை வீடியோவாக எடுத்தும் தனது யூடியூப் பக்கத்திலும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதன் காரணமாகவே அவர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

டிடிஎப் வாசன்: இருப்பினும், அவர் இளைஞர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக இருப்பதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்து கொண்டே தான் இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த செப்டம்பர் மாதம் 19இல் அவர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது விபத்தில் சிக்கினார். சுஸுகி ஹயபுசா என்ற பைக்கில் அதிவேகமாகச் சென்று போது, காஞ்சிபுரம் அருகே அவரது பைக் விபத்தில் சிக்கியது.

பைக் கட்டுப்பாட்டை இழந்து, அவர் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். அப்போதே அவரது விபத்து குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளும் கூட வெளியானது. வீலிங் செல்ல முயன்ற போது அவர் விபத்தில் சிக்கியது போலவே தெரிந்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் அதை மறுத்த டிடிஎப் வாசன், தான் வீலிங் எல்லாம் செய்யவில்லை என்றும் எதிர்பாராத விதமாக முன்பக்க டயர் தூக்கியதே விபத்திற்கு காரணம் என்று கூறியிருந்தார்.

ஜாமீன் கிடைத்தது: இந்த விபத்தில் அவரது கை முறிந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும், பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலீசார், டிடிஎப் வாசனை கைது செய்தனர். அவர் ஜாமீன் பெறத் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்த நிலையில், முதலில் நீதிமன்றம் இவருக்கு ஜாமீனை மறுத்தது. இதனால் சில மாதங்கள் வரை அவர் சிறையிலேயே இருக்க நேர்ந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து கடந்த மாதம் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரது லைசென்ஸ் 10 ஆண்டுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வெளியே வந்த முதல் நாளே சர்வதேச லைசென்ஸ் இருப்பதால் வண்டி ஓட்டுவேன் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியது தனிக் கதை. அதேநேரம் அவருக்கு லைசென்ஸ் வழங்கிய நீதிமன்றம், ஜாமீன் வழங்கிய போது போலீஸ் நிலையத்திற்கு தினசரி நேரில் சென்று கையெழுத்துப் போட வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் விதித்தது.

நொந்துபோன போலீஸ்: அதன்படி நேற்றைய தினம் அவர் கையெழுத்துப் போட பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அவரை பார்த்தவுடன் போலீசார் ஷாக் ஆகி போனார்கள்.. ஏனென்றால் பொதுவாக ஜாமீல் கையெழுத்துப் போட வருவோர், ஆர்டர் காப்பி உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருவார்கள். ஆனால் டிடிஎப் வாசன் ஆர்டர் காப்பி கூட எடுத்து வராமல் வந்துள்ளார். இதனால் நொந்துபோன போலீசார், "ஏன் பா.. போலீஸ் நிலையம் போகணும் சொன்ன வரப்ப வெறுங்கையை வீசிட்டா வருவ" என்று நொந்து கொண்டனர்.

பின்னர் எந்தெந்த ஆவணங்கள் எல்லாம் தேவை என்று விரிவாக விளக்கிச் சொன்ன போலீஸ், அதை எடுத்து வரச் சொன்னார்கள். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய டிடிஎப் வாசன் அடுத்த முறை தேவையான ஆவணங்களை எடுத்து வந்து கையெழுத்துப் போட்டார். அதன் பிறகு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்க முயன்ற போது, "நீங்க இதுவரை செஞ்சதே போதும்" என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

மேலும், காரில் ஏறும் முன்பு வழக்கம் போல இந்த 2கி கிட்ஸ் ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் போட்டோ எடுக்க டிடிஎப் வாசன் போஸ் கொடுத்த நிலையில், இது நடக்கும் எனத் தெரிந்தது போல பின்னாலேயே வந்த போலீஸ் அவர்களைக் கிளம்பச் சொல்லி அதட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+