'ஆக்கப்பூர்வ பணிகள் எவ்வளவோ இருக்கும்போது,இது தேவையா?' தமிழ்நாடு நாள் சர்ச்சை..டிடிவி தினகரன் சாடல்
சென்னை: தமிழ்நாடு நாள் குறித்த முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு தேவையற்றது என்று விமர்சித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆக்கப்பூர்வமாகச் செய்யவேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது, இத்தகைய பொருத்தமற்ற நடவடிக்கைகளை தி.மு.க அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சாடியுள்ளார்
கடந்த 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணம் அப்போது தான் பிரிக்கப்பட்டது. ஆந்திரா என்ற புதிய மாநிலமும் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு நாள்
தங்களுக்கென தனி மாநிலம் உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வதையில் கர்நாடகா, கேரளா மாநில மக்கள் நவம்பர் 1ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் கடந்த நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் எனக் கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பைச் சிலர் எதிர்த்திருந்தனர்.

மெட்ராஸ் மாகாணம்
அதாவது ஒருங்கிணைந்த மாநிலம் பிரிக்கப்பட்ட தினத்தைத் தமிழ்நாடு தினமாக கொண்டலாக்கக் கூடாது என்று தெரிவித்த அவர்கள், ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஏனென்றால் ஆங்கிலேய ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் என்றே தமிழ்நாடு அழைக்கப்பட்டு வந்தது. மெட்ராஸ் மாகாணத்தைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்,

தமிழ்நாடு பெயர்மாற்றம்
இதற்காக 1956இல் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகமும் செய்தார். இதையடுத்து 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என மாற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1967 ஜூலை 18ஆம் தேதி நிறைவேறியது. இதனைக் கொண்டாடும் வகையில் ஜூலை 18ஐ தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

முதல்வர் அறிவிப்பு
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது இனி ஆண்டுதோறும் ஜூலை 18ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். மேலும், நவம்பர் 1ஆம் தேதி எல்லைக்காகப் போராடிய தியாகிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக அரசு இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார். அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸும், பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல என்றும் நவம்பர் 1 ஆம் நாள் தான் தமிழ்நாடு நாள் என்று வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி சாடல்
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "தமிழ்நாடு நாள் குறித்த முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு தேவையற்றது; திரும்பப் பெற வேண்டியது. ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது, இத்தகைய பொருத்தமற்ற நடவடிக்கைகளை தி.மு.க அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக மக்கள் நலப் பிரச்னைகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications