Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செலவுதான் ஆகுது! பேசாம வித்துட்டே போயிடலாம்! புலம்பும் மக்கள்..அமமுக டிடிவி தினகரன் என்ன சொன்னார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தரமற்ற விலையில்லா மிதிவண்டிகளை விநியோகிப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் திட்டத்தை முடக்குவதை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் SC/ST மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விதிமுறைகள் தளர்த்தப்பட்டது.

TTV Dhinakaran Tamil Nadu Govt

தொடர்ந்து பதினோராம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ உள்ளிட்டவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா காரணமாக இலவச சைக்கிள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தரம் இல்லாத சைக்கிள்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதனை பழைய இரும்பு கடைகளுக்கு விற்று வருவதாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக பெற்றோர்களும், மாணவர்களும் தொடர் புகார் அளித்து வருகின்றனர். மேலும் தரமற்ற சைக்கிள்களை திரும்பப் பெற்றுக் கொண்டு தரமான சைக்கிள்களை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் திட்டத்தை முடக்குவதை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு மூலமாக விநியோகம் செய்யப்படும் விலையில்லா மிதிவண்டிகள் பழுதடைந்த நிலையிலும், தரமற்ற நிலையிலும் இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தரமற்ற முறையில் விநியோகிக்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளில் இருக்கும் பழுதுகளை நீக்குவதற்கு தனி செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும், முடியாத பட்சத்தில் அந்த மிதிவண்டிகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் என தொலைநோக்கு சிந்தனையுடன் இதயதெய்வம் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக முடக்கிவரும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மேல்நிலைக்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இதயதெய்வம் அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முடக்குவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் திமுக அரசால் லட்சக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்வதோடு, தரமற்ற முறையில் மிதிவண்டிகளை வழங்கிய ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+