வசமாக சிக்கிய விஜய்..அமமுக எம்எல்ஏவை அபகரிக்க முயற்சி..நள்ளிரவில் போலீசில் புகாரளித்த டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் மீது சென்னை கிண்டி போலீஸ் நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் புகார் கொடுத்தார். தனது கட்சியை சேர்ந்த மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் பெயரில் போலியாக ஆதரவு கடிதத்தை உருவாக்கி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் வழங்கி ஆட்சியை பிடிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மெஜாரிட்டி இல்லை. மெஜாரிட்டிக்கு மொத்தம் 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் விஜய் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் என 4 பேர் தவெகவிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். திருமாவளவனின் விசிக இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.

ttv dhinakaran vijay tvk

இதனால் இன்னும் ஒருவரின் ஆதரவு வேண்டும். இந்நிலையில் தான் நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் சந்தித்து தனக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி, ஆட்சியமைக்க மீண்டும் உரிமை கோரினார். அதில் மன்னார்குடி தொகுதியில் அமைச்சர் டிஆர்பி ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்ற அமமுகவின் காமராஜ் பெயர் இருந்தது.

ஆளுநரை சந்தித்த டிடிவி தினகரன்

இதனால் அதிர்ந்து போன அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து புகார் அளித்தார். அதில், ''எனது எம்எல்ஏவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது பெயரில் தவெகவினர் போலி ஆதரவு கடிதத்தை வழங்கி உள்ளனர். எனது எம்எல்ஏவை கடத்தி வைத்துள்ளனர். அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கும் முடிவில் இருக்கிறார்'' என்று கூறியிருந்தார்.

டிடிவி தினகரன் அட்டாக்

பிறகு நள்ளிரவில் எம்எல்ஏ காமராஜ், ஆளுநர் மாளிகை சென்று தவெகவிற்கு தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறினார். இதையடுத்து டிடிவி தினகரன், காமராஜ் உடன் சேர்ந்து அளித்த பேட்டியில்''ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே எங்களிடம் இருப்பதனால், அவரை தூக்கினால் கட்சி தாவல் சட்டம் வராது என்பதால் எங்க எம்.எல்.ஏவை குறிவைத்து தூக்கி இருக்கிறார்கள். போலி கடிதங்களை நம்பி பிறகு எப்படி ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்'' என்று குற்றம்சாட்டினார்.

போலீசில் புகார்

இதையடுத்து டிடிவி தினகரன் சார்பில் சென்னை கிண்டி போலீசில் தவெக தலைவர் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிண்டி உதவி போலீஸ் கமிஷனரிடம் வழங்கப்பட்ட புகாரில் தவெக தலைவர் விஜய் மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் பெயரில் போலியாக ஆதரவு கடிதம் வழங்கி மோசடி செய்து ஆட்சியை பிடிக்க முயன்றுள்ளார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+