டிடிவி தினகரன் கோவில்பட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு.,. மாலை முரசு அதிரடி கணிப்பு
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக மாலைமுரசு வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்த கட்சி, எந்த தொகுதியில் வெற்றி பெறும் என்பது குறித்து மாலை முரசு தொலைக்காட்சி கருத்துகணிப்பு நடத்தி வெளியிட்டு வருகிறது.
நேற்றும் இன்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 52 தொகுதிகளுக்கு நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டது.

திமுக 34
அந்த கணிப்பில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெல்லும் என்றும், அதிமுக கூட்டணி 11 இடங்களில் வெல்லும் என்றும் கூறியுள்ளது. அமமுக ஒரு இடத்தில் வெல்லும் என்றும் திமுக அதிமுக இடையே ஆறு இடங்களில் இழுபறி நீடிக்கும் என்றும் மாலை முரசு தொலைக்காட்சி கணிப்பில் கூறியுள்ளது.

ஆறு இடங்கள் இழுபறி
அதிமுக, திமுக இரண்டுக்குமே சவால் உள்ள தொகுதிகள் ஒரு புறம் என்றால், இந்த இரண்டு கூட்டணிகளுமே , வெல்ல வாய்ப்பு இல்லை என்றும் அமமுகவின் டிடிவி தினகரன் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கோவில்பட்டி தொகுதி குறித்து மாலை முரசு தனது கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது.

முமமுனைப்போட்டி
அங்கு அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டிடுயிகிறார். அதிமுக சார்பில் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் போட்டியிடுகிறார். மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது

அமமுக வெல்லும்
இந்நிலையில் மாலைமுரசு நடத்திய கருத்துக்கணிப்பில் கோவில்பட்டியில் அமமுகவின் டிடிவி தினகரனுக்கு 34 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு 29 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனுக்கு 24 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 4 சதவீதமும், மநீமவிற்கு 3 சதவீதமும் நோட்டாவிற்கு 2 சதவீதமும் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications