சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் - அரசுக்கு தினகரன் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

TTV Dhinakaran questions of Chennai Chief nurse death

கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும் அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பில் தமிழக அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்திருக்கிறது. கேஸ் ஷீட்டில்" கோவிட்- 19 என்று யாராவது தவறாக எழுதியிருப்பார்கள்' என்றொரு அலட்சியமான பதிலை மருத்துவமனை தரப்பு அளித்திருக்கிறது.

தலைமை செவிலியருக்கே இந்த நிலைமை என்றால் மற்ற நோயாளிகளின் கதி என்ன? கொரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்ததாக சொன்னால், அதற்கான இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றிக் கூறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

கொரோனா தடுப்புப்பணியில் போராடி வரும் மருத்துவத்துறையினருக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.

மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.. கலெக்டர்கள் யோசனை.. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.. கலெக்டர்கள் யோசனை.. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை

சென்னையில் நிலைமை கவலைக்கிடமாகிக்கொண்டே செல்கிறது. ஊடகங்களிடம் வீராவேசமாகவும், உருக்கமாகவும் மாறி,மாறி சினிமா வசனங்களைப்போல பேசுவது மட்டுமே போதுமென்று முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் நினைக்கிறார்களா?

இவ்வாறு தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
AMMK General Secretary TTV Dhinakaran has questiond over the Chennai Chief nurse death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X