அறிக்கை மட்டும் வருது..ஆனால் உள்ளே ஒன்னும் இல்லையே! எடப்பாடியோடு சேர்ந்த டிடிவி தினகரன்..செம அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியாய விலைக்கடைகளில் நிலவும் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை.

TTV Dhinakaran AMMK ration shop mk stalin

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக துவரம் பருப்பு பாமாயில் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக டெண்டர் பிரச்சினை எழுந்ததாகவும் இதன் காரணமாகவே ஆங்காங்கே சில இடங்களில் துவரம் பருப்பு பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதை உடனடியாக சரி செய்துள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அதே நேரத்தில் பாமாயில் பருப்பு பொது மக்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் விளக்கம் அளித்த நிலையில், தமிழக அரசு சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், நியாய விலைக்கடைகளில் நிலவும் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிப்பு - ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருட்களான பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கையில் 240வதாக இடம்பெற்றிருந்த நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு ஒரு கிலோ கூடுதலாக வழங்கப்படுவதோடு, உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டு வந்த அத்தியாவசியப் பொருட்களையும் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழும் போதெல்லாம், தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை என்ற தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருகிறதே தவிர அத்தியாவசியப் பொருட்கள் ஒருபோதும் வந்ததாக தெரியவில்லை என நியாய விலைக்கடை பணியாளர்களும், நுகர்வோர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி பருப்பு மற்றும் பாமாயில் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறதா ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.

எனவே, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+