எடப்பாடி அச்சத்தில் இருக்கிறார்.. "அந்த" பயம்.. ஓபிஎஸ் சவாலை ஏற்பாரா? என்ன டிடிவி இப்படி சொல்கிறார்!
சென்னை: ஓ பன்னீர்செல்வம் விட்ட சவாலை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல்நாள் நேற்று சட்டசபையை புறக்கணித்து அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி உண்ணாவிரதம் இருக்க முயன்றார். சாலையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
இதனால் போலீசாருக்கும் எடப்பாடிக்கும் இடையில் கடுமையாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடைசியில் எடப்பாடி பழனிசாமி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டார்.

என்ன நடந்தது?
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டசபை முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் பேசியதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் இதை முற்றிலுமாக மறுத்தார். எடப்பாடி பொய் சொல்கிறார். அது என்னை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமாக நான் நினைக்கவில்லை. நான் ஸ்டாலினை பார்த்தேன் என்றால் எடப்பாடி அதை நிரூபிக்கட்டும். நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன், என்று ஓபிஎஸ் சவால் விட்டார்.

டிடிவி தினகரன்
இது தொடர்பாக டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியில் இருக்கிறார். அவர் ஏதேதோ உளறுகிறார். போகிற போக்கில் ஏதோ கொளுத்தி போடுகிறார். அவர் பதற்றத்தில் இருக்கிறார். பதறிப்போய் இருக்கிறார் என்பது தெரிகிறது. அவர் பேச்சிலேயே எல்லாம் தெரிகிறது.

என்ன சொன்னார்?
அவர் பயந்து போய் இருக்கிறார். அவர் பேச்சு, நடவடிக்கையிலேயே இது தெரிகிறது. அவர் ஆட்சியில் இருந்த போது அதிகாரத்தில் ஆடினார். அதிகம் இருக்கிறது என்று ஏதேதோ செய்தார். அதிகார பலம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆட்டம் போட்டார். ஆனால் இப்போது அதெல்லாம் இல்லை.

எடப்பாடி பயம்
அதெல்லாம் இல்லை என்பதால் விரக்தியில் அவர் செயல்படுகிறார். ஸ்டாலினை ஓபிஎஸ் பார்த்தார் என்று எப்படி சொல்ல முடியும். முடிந்தால் எடப்பாடி இதை நிரூபிக்கட்டும். ஓபிஎஸ் சவால் விட்டு இருக்கிறாரே. அந்த சவாலை முடிந்தால் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டு நிரூபிக்க வேண்டும். அவர் செய்வாரா?

ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதாவின் மரணம் பற்றி முதலில் அரசியல் ஆதாயத்திற்காக சந்தேகம் எழுப்பியது என்னவோ திமுகதான். அதை அண்ணன் பன்னீர்செல்வம் கையில் எடுத்தார். அதை தொடர்ந்து பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஒப்பந்தம் போட்டு சேர்ந்தனர். இந்த ஒப்பந்தம் மூலமே ஆணையம் வந்தது. மற்றபடி இந்த ஆணையம் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications