தினகரனுக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது.. கைவிரித்தது தேர்தல் ஆணையம்
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு
சென்னை: குக்கர் சின்னத்தை டிடிவி தினகரன் வரும் தேர்தல்களில் நிரந்தரமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்துள்ளது.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், ஆர்கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு டிடிவி.தினகரன் வெற்றிபெற்றார்.
அதனால் "சென்டிமென்ட்டாக" இனிமேல் நடக்க உள்ள எல்லா தேர்தல்களிலும் இதே குக்கர் சின்னத்தை பயன்படுத்த விரும்பினார். இதற்காக இந்த சின்னத்தை தனது கட்சிக்கு நிரந்தரமாகவே ஒதுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.

எதிர்ப்பு கிளம்பியது
இது சம்பந்தமான விசாரணை நடந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், குக்கர் சின்னத்தை தினகரனுக்கு வழங்க எதிர்ப்பு சொல்லப்பட்டது. "தினகரனுக்கு குக்கர் சின்னம்தான் வேண்டும் என்றால், தேர்தல் தேதி முதலில் அறிவிக்கட்டும்.

தேவையற்றது
அதற்கு பிறகு அவர்கள் போட்டியிடும் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் சென்று முறையிட வேண்டுமே தவிர, இப்படி கோர்ட்டில் வழக்கு தொடர்வது தேவையற்றது'" என்று வாதம் செய்யப்பட்டது.

விளக்கம் கேட்டனர்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகளோ, "டிடிவி. தினகரனுக்கு இனி வரும் எல்லா தேர்தலிலும் குக்கர் சின்னத்தையே ஒதுக்க வழி உள்ளதா?" என தலைமை தேர்தல் ஆணையத்திடம் விளக்கமும் கேட்டிருந்தனர்.

தர முடியாது
இந்த நிலையில் இது சம்பந்தமான வழக்கு மீண்டும் நடைபெற்றது. அப்போது டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. குக்கர் சின்னம் பொதுவாக உள்ள சின்னம் என்பதால் அமமுக கட்சிக்கு என்று தனியாகவும், நிரந்தரமாகவும் தர முடியாது. தேர்தல் நேரத்தில் தான் அம்முக கட்சிக்கு எந்த சின்னம் என்பது முடிவு செய்யப்படும்" என தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது.

இரட்டை இலை
ஏற்கனவே கட்சி இரண்டாக உடைந்தபோது இரட்டை இலைக்காக ரெண்டு தரப்பினரும் சண்டை போட்டு கொண்டனர். கடைசியில் பாஜக தலையீட்டால் இரட்டை இலை அதிமுக வசம் சென்றது. வேற வழியில்லாமல் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டு, அதில் வெற்றியும் பெற்றார்.

அதிர்ச்சியில் தினகரன்
இரட்டை இலை என்ற பலமான முத்திரையை தாண்டி புதிதாக வந்த குக்கர் விசிலடித்து வெற்றி பெற வைத்தது. ஆனால் அந்த குக்கருக்கும் இப்போது தேர்தல் ஆணையம் தடையை போட்டு கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளதால் தினகரன் தரப்பு அதிர்ச்சியில் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications