மகள் திருமண ஏற்பாடுகள் மும்முரம்... தேர்தல் பணிகள் முடிந்தும் ஓய்வில்லாமல் ஓடும் டிடிவி தினகரன்..!
சென்னை: சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக தொடர்ந்து தமிழகம் முழுவதும் பயணித்த டிடிவி தினகரன், அடுத்ததாக தனது மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகளையும், பணிகளையும் ஓய்வின்றி தொடர்ந்து வருகிறார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும் தஞ்சை மாவட்டம் பூண்டி துளசி அய்யா வாண்டையாரின் பேரனான ராமநாதனுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு என தேதி மாற்றப்பட்டது.

இப்போது சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டதால் ஜெயஹரிணி -ராமநாதன் திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை இரு வீட்டாரும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். மணமகனின் தந்தை கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக இருக்கிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் கேட்டிருந்த நிலையில் அவருக்கு கொடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகிய பிறகு சொல்லிக்கொள்ளும் வகையில் இதுவரை எந்த முக்கிய நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத சூழலில், டிடிவி தினகரன் மகள் திருமணத்தை முன்னின்று அவர் நடத்தி வைப்பார் எனத் தெரிகிறது. சசிகலா பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் அது அரசியல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்படுகிறது.
இதனிடையே தேர்தல் முடிவுக்கு பிறகு நடக்கும் அரசியல் மாற்றங்களை பொறுத்தே திருமண விழாவில் சசிகலாவின் உரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், கொரோனா பரவல் உள்ளிட்ட இன்னும் சில காரணங்கள் காரணமாக தலைமைக்கழகம், மாவட்ட, நகர, ஒன்றியச் செயலாளர்களுக்கு மட்டும் மகளின் திருமண அழைப்பிதழை அனுப்பும் திட்டத்தில் இருக்கிறாராம் டிடிவி.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications