"சைக்கிள்கேப்புல".. திருமா மாதிரியே தினகரனும் சொல்றாரே.. "40,000".. திமுகவை விடாமல் விரட்டும் டிடிவி
ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்
சென்னை: பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு அறிவிக்கப்பட்ட ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்காது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தினகரனை பொறுத்தவரை, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், காட்டமாக விமர்சித்து ட்வீட் போட்டு வந்தவர்.. எந்த குறைகளையும் துணிச்சலாக சுட்டிக்காட்டி வருபவரும்கூட.
அதேசமயம், திமுக எதிர்ப்பு என்ற விஷயத்தில் இப்போதுவரை உறுதியுடன் இருந்து வருகிறார்.. 2 வருடங்களுக்கு முன்பு, திமுகவை எந்த அளவுக்கு விமர்சித்து வந்தாரோ, அதே அளவுக்கு எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து வந்தார்.

பழனிசாமி
இதற்கு பிறகு, நேரடியான விமர்சனங்களை அதிமுகவுடன் குறைத்து கொண்டதுடன், "திமுகவை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள், ஆனால், அதிமுகவை அவ்வளவாக விமர்சிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு தினகரன் வாய்மொழியாக கேட்டுக்கொண்டதாகவும் கடந்த வருடத்தில் செய்திகள் கசிந்தன.. இப்போதும் எடப்பாடி பழனிசாமியை அவ்வளவாக விமர்சிக்காத அதேசமயம், ஓபிஎஸ் மீதான ஆதரவு அலையை செய்தியாளர்களிடம் பேசும்போது சமீபகாலமாகவே கவனிக்க முடிகிறது.

குறி திமுக
"தீய சக்தி திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒரு நல்ல கூட்டணி அமைத்தால் அதைக் கண்டிப்பாக நாங்கள் பரிசீலிப்போம். நான் எடப்பாடி பழனிசாமி போல உச்சத்தில் இருந்து செயல்படுபவன் அல்ல. திமுகவை வீழ்த்துவதற்காக பன்னீர்செல்வம் செயல்பட்டால் அவருடன் இணைந்து பேச திறந்த மனதோடு இருக்கிறேன்" என்று தினகரன் வெளிப்படையாகவே சொல்லி இருந்தார்.. அந்தவகையில் அன்றுமுதல் இன்றுவரை திமுக மட்டுமே தினகரனுக்கு முக்கிய குறியாக இருந்து வருகிறது. அதனால்தான், திமுக அரசுவின் ஒவ்வொரு நிகழ்வையும் தினகரன் உற்று கவனித்து வருவதுடன், அதுகுறித்த விமர்சனங்களை உடனுக்குடன் வெளிப்படுத்தி வருகிறார்.

சைக்கிள் கேப்
ஏதாவது சின்ன சான்ஸ் கிடைத்தாலும், அங்கேயும் நுழைந்து, தன் கருத்தை பதிவிட்டு விடுகிறார் தினகரன். அந்தவகையில், முக்கிய கோரிக்கை ஒன்றை தினகரன் தற்போது விடுத்துள்ளார்.. தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழை நீர் சூழ்ந்து, மொத்தமும் சேதம் அடைந்து நாசமாகின... இதனையடுத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர்.

டிடிவி தினகரன்
இதனையடுத்து, டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணமாக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலினும் அறிவித்தார்... ஆனால், ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மிகவும் குறைவானது, இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாய சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.. அதுபோலவே, பல்வேறு அரசியல் கட்சிகளும் நிவாரண தொகையை உயர்த்தி கேட்டு வருகிறார்கள்.. அமமுக பொதுச்செயலாளர் தினகரனும், உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகையை அறிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல என்று கூறியுள்ளார்.

பத்தல பத்தல
இதுதொடர்பாக தினகரன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் எதிர்பாராமல் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் ஒரே நாளில் அரைகுறையாக பார்வையிட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருக்கின்றனர். 33 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என திமுக அரசு கூறியுள்ளது.

திருமாவளவன்
உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகையை அறிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனும் விவசாயிகள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என தினகரன் பதிவிட்டுள்ளார். எதிர்க்கட்சியான தினகரன் சொன்ன இதே கருத்தைதான், கூட்டணியில் உள்ள திருமாவளவனும் சொல்லி உள்ளார்.. மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்காது.. அதனால், இழப்பீட்டு தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications