2 மேட்டர்.. திரும்ப திரும்ப அதே விஷயம்.. அவர் தேவையில்லாமல் பேசறாரே.. டிடிவி தினகரன் வைத்த கோரிக்கை
டிடிவி தினகரன் மீண்டும் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்
சென்னை: "ஆளுநரின் செயல்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமாக உள்ளது. வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மத்திய அரசுக்கு தமிழகத்தில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் பேசி வருவதால் அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் அமமுகவின் கோரிக்கையாக தினகரன் முன்வைத்துள்ளார்
அரசு தயாரித்த அறிக்கையை சட்டமன்ற கூட்டத்தொடரில் வாசிக்காததும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டன உரையின்போது ஆளுநர் அவையை விட்டு திடீரென வெளியேறியதும், இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்ததும், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
திமுக கூட்டணி கட்சிகள் என்றிலாமல், நாம் தமிழர் கட்சி சீமான், அமமுக டிடிவி தினகரன், போன்றோரும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆட்டுக்குதாடி
இதில் டிடிவி தினகரன் கண்டனமானது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.. காரணம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த அதேசமயம், திமுக அரசின் மீதான தவறையும் சுட்டிக்காட்டியிருந்தார்.. அதாவது 2 தரப்பையுமே தினகரன் விமர்சித்திருந்தார். "ஆளுநர் உரையைத் தயாரித்து அதனை இறுதி அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்தக் கருத்து வேறுபாடுகளை ஆளுநர் மாளிகையும், தமிழக அரசும் சரிசெய்திருக்க வேண்டும்.. அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி என்பது தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடும்.

பலவீனங்கள்
அதே நேரத்தில், அரசியல் சட்டப்படி, அந்த பதவி இருக்கும் வரை அதிலிருப்பவருக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டியதும் அவசியம்... இதைப்போன்றே, மரபுகளை உடைத்துவிட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல. ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று தினகரன் வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு பிறகு, மறுநாளே செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசியிருந்தார்.

தப்பு தப்பு
அப்போதும் ஆளுநர் செயல்பாட்டை விமர்சித்திருந்தார்.. "முதலமைச்சர் இப்படி தீர்மானம் கொண்டுவரும் அளவுக்கு முதல்வரின் நிலைமையை உருவாக்கியதே கவர்னரின் செயல்பாடுகள்தானே. அதனால் அரசியலமைப்பு சட்டத்தை மீறிவிட்டார் என்றெல்லாம் நாம் சொன்னாலும், உண்மை என்னவென்றால், ஒரு அரசியல் தலைவராக, முதல்வர் செய்தது தவறில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், கவர்னரே ஒரு அரசியல்வாதிபோல், தமிழ்நாடு என்று பெயர் வைத்ததை தப்பு என்கிறார். இதுபோல எத்தனையோ விஷயங்கள்... திராவிடத்தை பற்றி அவர் பேசுகிறபோது, தமிழ்நாட்டுக்கு முதல்வராக இருப்பவர், மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய இடத்தில் இருப்பவர், அப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. எது எப்படியோ, இந்த நிகழ்வு ஜனநாயகத்தக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறியிருந்தார்.

எம்ஜிஆர்
இப்போது மீண்டும் ஒருமுறை ஆளுநரை விமர்சித்து டிடிவி தினகரன் பேட்டி தந்துள்ளார்.. அதிமுக நிறுவனத்தலைவர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவில் ஏற்பட்ட பதவி சண்டை இப்போது நீதிமன்ற வரை சென்றுள்ளது.. அது குறித்து பேசுவது எந்தவிதமான பயனும் இல்லை. திமுக ஆட்சி அமைந்து ஒன்றை வருட காலம் ஆகிறது. ஆனால் இப்போது தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

பூத் கமிட்டி
வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்தவும் பூத் கமிட்டி அமைப்பதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியாக சென்று அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்ற பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி பற்றிய முடிவு அமமுக விரைவில் அறிவிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இந்த வருட இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓர் அணியில் திரள வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அதுதான் எங்களுடைய கருத்தும் கூட. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை மீட்டு எடுப்போம்.

ஜெயலலிதா
ஆளுநரின் செயல்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமாக உள்ளது. வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது.. மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படும் விதமாக ஆளுநர் ரவி நடந்து கொள்கிறார். அமைதி பூங்காவான தமிழகத்தில் குழப்பத்தை விளைவிப்பதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது.. ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்று ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார். தமிழ்நாடு மக்கள் அனைவரும் வருத்தப்படும் விதத்தில் அவர் பேசுகிறார். மத்திய அரசுக்கு தமிழகத்தில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதால், அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கை" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன் ரூட்
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், பாஜகவுடன் அமமுக கூட்டணி வைக்கக்கூடும் என்ற பேச்சு நிலவிவருகிறது.. ஆனால், டிடிவி தினகரன் இதவரை பாஜகவுடன் கூட்டணி என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று பூடகமாக சொல்லி வருகிறார்.. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் வலுவாக உள்ள நிலையில், தினகரன் காங்கிரசுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.. எனினும், ஆளுநர் செயல்பாடு தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாய்திறக்காமல் அமைதி காத்து வரும்நிலையில், தினகரனின் அடுத்தடுத்த பேட்டிகள் பரபரப்பை கூட்டி வருகின்றன..

ப்ளான் என்ன
ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சரியானதே என்பதுடன், மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற்றால் மட்டுமே மத்திய பாஜக அரசுக்கு இங்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று தினகரன் சொல்லிவரும் கருத்துக்கள், மிகுந்த கவனத்தை பெற்று வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் நிறைய டைம் உள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக இப்போதே பேசினால், பலரது நம்பிக்கையை இழந்து, தேவையில்லாமல் அதிருப்தியை பெற்றுவிடக்கூடும் என்பதாலேயே, தற்சமயம் பாஜகவுக்கு ஆதரவு என்பது போல அமமுக தரப்பு காட்டி கொள்ளாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.. 6 மாதம் கழித்து, இந்த நிலைப்பாடு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications