நாங்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்கள்..அவிங்க தீபாவளிக்கு மட்டும்தான் குளிப்பார்கள்- டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நாங்கள் தினமும் குளிப்பவர்கள்..அவிங்க தீபாவளிக்கு மட்டும்தான் குளிப்பார்கள்- தினகரன்

    குடியாத்தம்: நாங்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்கள். அவர்கள் தீபாவளி தீபாவளிக்கு தலைக்கு குளிப்பார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    சென்னை மகாகவி பாரதியார் நகரில் டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் மக்கள் நலப் பணிகள் செய்யப்படாததை கண்டித்து தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண்டிப்பட்டியில் தங்கதமிழ்செல்வன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

    தினகரன் தலைமையில்

    தினகரன் தலைமையில்

    இந்நிலையில் குடியாத்தத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜெயந்தி பத்மநாபன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.

    அமைதி புரட்சி

    அமைதி புரட்சி

    அப்போது அவர் பேசுகையில் ஆளும் கட்சியினர் அனுமதி மறுப்பதற்கு காரணம் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள். இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும், எப்போது தேர்தல் வரும் என தமிழகம் முழுவதும் மக்கள் அமைதியாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அமைதி புரட்சி நடக்கும். இதை நாடாளுமன்ற பொது தேர்தலிலேயே நீங்கள் பார்க்கலாம்.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக தான் மக்கள் திரண்டு நிற்கிறார்கள். ஜனவரி 25- வரை மேல்முறையீடு செய்ய காலம் உள்ளதால் ஜனவரியில் இடை தேர்தல் வராது. அதற்கு பிறகு தான் தேர்தலை அறிவிக்க வாய்ப்புள்ளது.

    குளிப்பார்கள்

    குளிப்பார்கள்

    நாடாளுமன்ற தேர்தலுக்கு தான் வாய்ப்பு உள்ளது. நாங்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்கள். அவர்கள் தீபாவளி தீபாவளிக்கு தான் தலைக்கு குளிப்பார்கள் என்றார் தினகரன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+