சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்வாகிகள் விலகிச் செல்ல செல்ல கட்சி பலப்படும்.. தில் தில் தினகரனின் அசால்ட் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: யார் எங்கு போனாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் நிர்வாகிகள் விலகி செல்ல செல்ல கட்சி பலப்படும் என்றும் தினகரன் அசால்ட்டாக பதில் அளித்துள்ளார்.

தினகரன் கட்சி தொடங்குவதற்கு முன் அவர் எப்படியும் அதிமுகவை மீட்டெடுப்பார் என நம்பி அவர் பின்னால் ஏராளமான நிர்வாகிகள் சென்றனர். அவர் அதிமுகவை மீட்க நடவடிக்கை எடுத்த போதே, ஆர் கே நகர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ஆர் கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றது போல் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலிலும் தினகரனின் அமமுக வெற்றி பெற்று விடும் என எண்ணினர். ஆனால் தினகரனின் கட்சி தோல்வியை சந்தித்தது.

கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரியில் கொந்தளித்த திமுக.. நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரியில் கொந்தளித்த திமுக.. நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

திமுகவுக்கு

திமுகவுக்கு

முன்னதாக தினகரனுக்கு எல்லாமுமாக இருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவினார். தேர்தல் தோல்விக்கு அடுத்து தங்கதமிழ்ச் செல்வனும் கடந்த வெள்ளிக்கிழமை திமுகவுக்கு மாறினார்.

ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

இதையடுத்து சசிகலா, தினகரன் ஆகியோரிடம் நெருக்கமாக இருந்த இசக்கி சுப்பையாவும் தற்போது அமமுகவிலிருந்து விலகி, விரைவில் அதிமுகவில் 20 ஆயிரம் ஆதரவாளர்களுடன் இணையவுள்ளார்.

சுயலாபம்

சுயலாபம்

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் ஏற்கெனவே நான் சொன்னதுதான். நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணங்களுக்காகவும் சுயலாபத்துக்காகவும் கட்சியை விட்டு விலகுகிறார்கள்.

பாதிப்பு

பாதிப்பு

இதனால் அவர்களை தடுத்து நிறுத்தி என்னவாக போகிறது. கட்சி என்பது விருப்பப்பட்டு இருப்பதுதான். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தினகரன் கட்சி சரிவு என்று வேண்டுமென்றால் ஊடகங்களில் போட்டுக் கொள்ளுங்கள். யார் விலகி சென்றாலும் பாதிப்பில்லை. நிர்வாகிகள் விலகி செல்லச் செல்ல கட்சி பலப்படும் என தினகரன் தெரிவித்தார்.

English summary
TTV Dinakaran says that i dont bother about those who quit from party. If they go out then only party will be strengthened.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X