அமமுகவில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு; விஜயகாந்தை நாளை சந்திக்கிறார் டி.டி.வி தினகரன்!
சென்னை: அமமுகவில் வாசுதேவநல்லூர், கீழ்வேளூர் தொகுதிகளில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அமமுகவும் வலிமையான கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்த தேமுதிக, அமமுக கூட்டணியில் உள்ளது.

இதுபோக அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் கட்சி, எஸ்டிபிஐ கட்சி அமமுக கூட்டணியில் உள்ளது. இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.
அமமுகவில் 15 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலும், 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும், 130 பேர் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலும், அடுத்ததாக 7 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் அமமுக சார்பில் வாசுதேவநல்லூர், கீழ்வேளூர் தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்வேளூர்(தனி) எம்.நீதிமோகன், வாசுதேவநல்லூரில் தங்கராஜ் ஆகியோர் போட்டியிட உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications