5000+ பேருக்கு அநீதி.. கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனே பணி ஆணையை வழங்குக: தினகரன்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மின்வாரியத்தின் கேங்மேன் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பணி வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் விரக்தி அடைந்தவர்கள், கொளத்தூரில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேங்மேன் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைந்து பணி ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
அரசு நடத்திய எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாத காரணத்தினால் சென்னை கொளத்தூரில் உள்ள் முதலமைச்சர் .க.ஸ்டாலின் அவர்களின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழலுக்கு கேங்மேன் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 21, 2023
அரசு நடத்திய எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற…
கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனம் செய்வோம் என திமுக அளித்த வாக்குறுதியை நம்பி காத்திருந்ததோடு, முதலமைச்சரின் அலுவலகம், மின்சார வாரியம் என கேங்மேன் பணிக்கு தொடர்புடைய பல இடங்களில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கியிருக்கும் கேங்மேன் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications