தினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே
தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர் வேண்டும் என்றால் டிடிவி தினகரன் மனது வைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர் வேண்டும் என்றால் டிடிவி தினகரன் மனது வைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முதல் நாளோடு தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஏப்ரல் 18 மற்றும் மே 19ம் தேதி தேர்தல் நடந்தது.

என்ன கணிப்பு
இந்த் நிலையில் தமிழகத்தில் நடந்த 22 தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி 14 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. அதாவது திமுக பெரும்பாலும் ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு இருக்கிறது.

அதிமுக நிலை
இந்த கருத்துக் கணிப்பில், அதிமுகவுக்கு வெறும் 3 தொகுதிகள்தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக குறைந்தது 5 இடங்களில் வெல்ல வேண்டும். அப்படி வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்.

கவிழ வாய்ப்பு
அதனால் அதிமுக ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இதுதான் அதிமுகவை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. மீதம் இருக்கும் 5 இடங்களில் 4ல் அமமுக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிப்படுகிறது.

இவர்தான்
இதனால் தற்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர் வேண்டும் என்றால் டிடிவி தினகரன் மனது வைக்க வேண்டும். இவர் யாருக்கு ஆதரவு அளிக்கிறாரோ அவர்தான் ஆட்சி அமைக்க முடியும். இவர் ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications