அக்.16-ம் தேதி விடுதலையாகிறார் சுதாகரன்... ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது சிறைவாசம்..!
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுதாகரன் நாளை மறுநாள் விடுதலையாகிறார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி சசிகலாவும், இளவரசியும் தங்களது தண்டனைக் காலத்தை முழுமையாக அனுபவித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

அபராதம்
அவர்களுடன் சிறை தண்டனை அனுபவித்த சுதாகரனுக்கு தண்டனைக் காலத்துடன் சேர்த்து ரூ.10 கோடியே ரூ.10,000 அபராத தொகையாக விதிக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை சுதாகரனால் செலுத்த முடியாத காரணத்தால், கடந்த பிப்ரவரி மாதம் அவரால் விடுதலையாக முடியவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதலாக ஓராண்டு தண்டனை அனுபவிக்க நேரிட்டது.

தண்டனைக் காலம்
இதனிடையே ஏற்கனவே பாளையங்கோட்டை சிறையில் தண்டனை அனுபவித்த காலத்தை சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி, கூடுதலாக விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனை காலத்தை சுதாகரனுக்கு குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுதாகரன் அனுபவித்து வரும் கூடுதலான ஓராண்டு தண்டனைக் காலத்தில் 89 நாட்களை குறைத்துள்ளது.

அக்கா மகன்
அதன்படி அக்டோபர் 16-ம் தேதி, அதாவது நாளை மறுதினம் அவர் விடுதலை செய்யப்படவுள்ளார். இது குறித்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் சொந்த அக்கா மகன் தான் சுதாகரன் என்பதும் இவர் டிடிவி தினகரனுக்கு உடன் பிறந்த தம்பி என்பதும் கவனிக்கத்தக்கது.

சிவாஜி குடும்பம்
நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தில் பெண் எடுத்துள்ள சுதாகரனுக்கு, தன் வீட்டு தரப்பிலும் சரி மாமனார் வீட்டு தரப்பிலும் சரி யாரும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த முன் வரவில்லை. சுதாகரன் மீது பரிதாபப்பட்டு முன் கூட்டியே அபராதம் செலுத்தப்பட்டிருந்தால், இவரும் கடந்த பிப்ரவரி மாதமே விடுதலையாகி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைவாசத்துக்கு பிறகு சுதாகரன் முழுக்க முழுக்க ஆன்மிக பணிகளில் மட்டுமே நாட்டம் செலுத்துவார் என்றும் அரசியல் பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications