பிளஸ் 2 முடித்த மாணவர்களே.. பிஇ சேர ஆசைப்படுறீங்களா.. கட்டணம் அதிரடியாக உயரப்போகுது?
சென்னை: தமிழகத்தில் என்ஜினீயரிங், துணை மருத்துவப்படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயரும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படுமா அல்லது அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருமா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று கல்வியாளர்கள் சொல்கிறார்கள்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்துவிட்ட நிலையில் அடுத்து மருத்துவம், இன்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரி என எந்த படிப்பில் சேரலாம் என்பது குறித்து மாணவர்கள் ஆர்வமுடன் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் சில பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் 25 சதவீதம் வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பத்துள்ளனர். செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என கோரியுள்ளன.

தமிழகத்தில் என்ஜினீயரிங், துணை மருத்துவப்படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை, கட்டண நிர்ணய குழு நிர்ணயித்து வருகிறது. அதாவது, பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், கலை மற்றும் அறிவியல், கல்வியியல் ஆகிய படிப்புகளுக்கு கட்டணத்தை நிா்ணயிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவிடம் தான் கட்டண உயர்வு தொடர்பாக கல்லூரி நிர்வாகங்கள் விண்ணப்பித்துள்ளன.
குறிப்பாக பி.இ., பி.டெக். ஆகிய பொறியியல் படிப்புகளுக்கும் நா்சிங், பாா்மஸி, உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கும் (இளநிலை, முதுநிலை) பி.ஏ., பி.எட். ஆகி படிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகங்கள், கட்டண உயா்வு குறித்து விண்ணப்பத்துள்ளன. பொறியியல் படிப்புகளை நடத்தி வரும் தனியாா் கல்லூரிகள் 20 முதல் 25 சதவீத கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன. இதையடுத்து, பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்புகளிடம் கருத்துகளை கேட்க கட்டண நிர்ணய குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போதைய நிலையில் பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஆக இருக்கிறது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. தனியாா் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். இடங்களுக்கு கல்விக் கட்டணமாக ரூ.45 ஆயிரம் வரை நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கட்டண விகிதம் மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது..
அதன்பிறகு, புதிய கட்டண நிர்ணய முறை வரும் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்படுமா? அல்லது 2025-26-ம் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக, உயர்கல்வித்துறை சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கல்வியாளர்கள் சொல்கிறார்கள். ஒரு வேளை புதிய கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டு வரும் கல்வியாண்டில் அமலுக்கு வந்தால், அது 3 ஆண்டுகளுக்கு, அதாவது 2026- 2027-ஆம் கல்வி ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications