செங்கல்பட்டு ஸ்டேஷனில் ஷாக்! சட்டென தடம் புரண்ட ராட்சச சரக்கு ரயில்! அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன
சென்னை: சென்னை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது.
இந்தியாவில் தற்போது ரயில் விபத்து அதிகரித்து உள்ளது. முக்கியமாக சரக்கு ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளன.

ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கியது. அங்கே அள்ள அள்ள உடல்களாக வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விபத்து இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது. பீகார் ரயில் விபத்தில் 1981ல் 800 பேர் இறந்தனர். அதேபோல் 1956ல் அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்தனர். அதற்கு இணையான விபத்து இப்போது ஒடிசாவில் ஏற்பட்டு உள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதவில்லை.
முதலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்தான் விபத்தில் சிக்கி உள்ளது. அதன்படி இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் வந்த போது அங்கே இருந்த மெயின் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலை கொண்டு செல்ல கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர்.அதே நேரத்தில் எதிரில் இன்னொரு ரயிலும் வந்ததால் விபத்து ஏற்பட்டு உள்ளது.
ஆந்திரா விபத்து: கடந்த அக்டோபர் மாதம் ஆந்திர பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தும் இப்படித்தான் ஏற்பட்டு உள்ளது. ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 10 பயணிகள் பலியாகி உள்ளனர்.
விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயிலும், பலாசா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதிக்கொண்டன. ஆந்திர மாநிலம் கண்டகபள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதுதான் விபத்திற்கு காரணம்.
விசாகப்பட்டினத்தில் இருந்து ராய்காட் நோக்கி பயணிகளுடன் பயணித்த ரயில் பழுது காரணமாக அங்கே நின்று உள்ளது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதியதால் பெட்டிகள் தடம் புரண்டன. இரண்டாவது வந்த ரயிலுக்கு ஒரே நேரத்தில் கிரீன் விளக்கு கொடுக்கப்பட்டதே விபத்துக்கு காரணம். இதற்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் விபத்து: இந்த நிலையில்தான் இன்று : சென்னை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்களும் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த ரயில் விபத்து காரணமாக பயணிகள் ரயில் எதுவும் விபத்தில் சிக்கவில்லை. அதேபோல்உயிர் சேதங்களும் ஏற்படவில்லை.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications