டிவி நடிகை சித்ரா வழக்கு.. சென்னை கோர்ட்டுக்கு மாற்றக் கோரி தந்தை மனு.. ஹேமந்த் மீது பரபரப்பு புகார்
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அவருடைய தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது கணவர் ஹேமந்த்தான் காரணம் என சித்ராவின் தாய், தந்தை புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜாமீன் பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார். பின்னர் அவரை சிலர் கொல்ல முயற்சிப்பதாக பரபரப்பு புகாரை அளித்திருந்தார். இந்த நிலையில் சித்ராவின் உடலை போஸ்ட்மார்டம் செய்த மருத்துவர்கள் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கை அளித்துள்ளனர்.
ஆனால் சித்ராவின் தாயாரோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால் கண்கள் பிதுங்கி, மலம், சிறுநீர் கழித்திருப்பார். ஆனால் சித்ராவுக்கு அதெல்லாம் நடக்கவில்லை. அவரை ஹேமந்த் கொலை செய்து தூக்கில் மாட்டியுள்ளார் என புகார் அளித்திருந்தார். ஆனால் போஸ்ட்மார்டம் செய்த மருத்துவர்களோ சிலருக்கு மலம் வெளியேறும் , சிலருக்கு வெளியேறாது என்கிறார்கள்.
3 ஆண்டுகளாக இந்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் சித்ராவுக்கும் ஹேமந்துக்கு பதிவு திருமணமாகி 6 மாதங்களே ஆனதால் இந்த வழக்கை திருவள்ளூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தியுள்ளார். இந்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூரில் உள்ள சித்ரா மரண வழக்கை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சித்ராவின் கணவர் ஹேமந்த் வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே புதிய புதிய மனுக்களை தாக்கல் செய்து வருகிறார். எனது வயதை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கை சென்னை கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். அத்துடன் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications