வெளியே விடக்கூடாது..கர்ப்பிணி மனைவி நடிகை திவ்யாவின் மனு..அர்ணவ் ஜாமீன் மனுவை நிராகரித்த கோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்லம்மா சீரியல் நடிகர் அர்ணவ் 15 நாள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அர்ணவ் வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்ற திவ்யா தரப்பில் அளிக்கப்பட்ட மனு ஏற்கப்பட்டுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் திவ்யா தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். அதே சீரியலில் அர்ணவ் உடன் இணைந்து நடித்தார் திவ்யா. இருவரும் திருமணமாகாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர்.

சன் டிவியில் மகராசி சீரியலில் நடித்தார் திவ்யா. பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார் திவ்யா. விஜய் டிவி செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார் அர்ணவ்.

அர்ணவ் திவ்யா திருமணம்

அர்ணவ் திவ்யா திருமணம்

இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாக கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் போட்டோக்களுடன் செய்திகள் வெளியாகின. இந்து முறைப்படியும் இஸ்லாமிய முறைப்படியும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தை அறிவித்த சில வாரங்கள் கழித்த நிலையில், தனது கணவர் அர்ணவ் தன்னை தவிர்த்து வருவதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் திவ்யா.

 அடித்த அர்ணவ்

அடித்த அர்ணவ்

கர்ப்பமாக இருக்கும் தன்னை கீழே தள்ளியதால், கரு கலைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் நடிகை திவ்யா கண்ணீருடன் புகார் தெரிவித்திருந்தார். வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை தவிர்த்து வருவதாகவும் கூறினார் திவ்யா.

கட்டாய மத மாற்றம்

கட்டாய மத மாற்றம்

கட்டயமாக மதமாற்றம் செய்து தன்னை திருமணம் செய்து கொண்ட அர்ணவ், தான் கர்ப்பமான பின்னர் தன்னை தவிர்த்து வருவதாகவும் தன்னை கவனிப்பதில்லை, உணவு வாங்கிக் கொடுப்பதில்லை என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் திவ்யா.

அர்ணவ் மறுப்பு

அர்ணவ் மறுப்பு

இது குறித்து பேசிய அர்ணவ், கடந்த 5 வருடங்களாக திவ்யா தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், கணவருடன் இருந்துக் கொண்டே விவாகரத்து ஆகிவிட்டது என பொய் சொல்லி தன்னை காதலித்ததாகவும், அவருக்கு பெண் குழந்தை இருந்ததையும் மறைத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இத்தனை பிரச்சினைக்கும் காரணம் ஈஸ்வர்தான் என்றும் தனக்கு மனைவி திவ்யாவும் குழந்தையும் வேண்டும் என்றும் பேட்டி அளித்தார் அர்ணவ்.

அர்ணவ் மீது வழக்குப்பதிவு

அர்ணவ் மீது வழக்குப்பதிவு

இதற்கிடையே திவ்யாவை அடித்து துன்புறுத்தியாக அளித்த புகாரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்ணவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை பெற்று கொண்ட நிலையில் அர்ணவ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அர்ணவ் கைது

அர்ணவ் கைது

இதையடுத்து கடந்த வாரம் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் போலீசார் அர்ணவை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் படி அர்ணவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அர்ணவ். இப்போ திவ்யாவிற்கு சந்தோஷமா என்றும் கோபமாக கேட்டார் அர்ணவ்.

ஜாமீன் கோரிய அர்ணவ்

ஜாமீன் கோரிய அர்ணவ்

இந்நிலையில் அம்பத்தூர் சிறப்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் பரம்வீர் முன்னிலையில் இன்று நடிகர் அர்ணவ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில் தனது மனைவி திவ்யா கருவை கலைத்து விட்டு டிவி சீரியலில் நடிக்க முயற்சி செய்வதாகவும் அவரை தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திவ்யா எதிர்ப்பு

திவ்யா எதிர்ப்பு

அதே நேரத்தில் அர்ணவ் வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளதால் அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்றும் திவ்யா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த அம்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் அர்ணவ் அளித்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டிவி சீரியல் போல பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பாக நகர்கிறது செல்லம்மா சீரியல் நடிகர் வழக்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+