சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் அந்த முன்னாள் எம்எல்ஏ?.. சின்னத்திரை நடிகை சித்ரா சாகும் முன் சொன்னது என்ன? ஹேமந்த் கூறிய முக்கிய க்ளூ!

Google Oneindia Tamil News

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அவரது கணவர் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண விவகாரம் கடந்த இரு ஆண்டுகள் கழித்து தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. விஜே சித்ரா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் அடங்கியிருப்பது அவர் இறந்த போதிலிருந்தே தெரியவந்தது.

ஆனால் சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்புக்கு யார் காரணம் என்பது மட்டும் புலப்படாமல் இருந்து வந்தது. சீரியல் நடிகை சித்ராவின் குடும்பத்தினரால் குற்றம்சாட்டப்பட்ட ஹேமந்தும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

விஜே சித்ரா இறந்தப்ப அதிமுக ஆட்சி! முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கையிருக்கு! லிஸ்ட் தரேன்.. ஹேமந்த் விஜே சித்ரா இறந்தப்ப அதிமுக ஆட்சி! முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கையிருக்கு! லிஸ்ட் தரேன்.. ஹேமந்த்

கஸ்டடி

கஸ்டடி

அவர் போலீஸ் கஸ்டடியில் எந்த வித முக்கிய தகவலும் வாக்குமூலமாக கொடுத்ததாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது உயிருக்கு ஆபத்து என ஹேமந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சித்ரா மரணத்தில் 4 பேருக்கு தொடர்பிருக்கிறது.

அரசியல்வாதி

அரசியல்வாதி

அரசியல்வாதி, சென்னை தொழிலதிபர், சின்னத்திரை நடிகர், போதை கும்பலை சேர்ந்தவர் என 4 பேருக்கு தொடர்பிருக்கிறது. சித்ராவுக்கு யாரெல்லாம் டார்ச்சர் கொடுத்தார்கள் என்பது குறித்து சித்ரா என்னிடம் தெரிவித்திருந்தார். எனவே அவர்கள் யாரென்று எனக்கு தெரியும்.

அரசியல்வாதி

அரசியல்வாதி

அரசியல்வாதி, சென்னை தொழிலதிபர், சின்னத்திரை நடிகர், போதை கும்பலை சேர்ந்தவர் என 4 பேருக்கு தொடர்பிருக்கிறது. சித்ராவுக்கு யாரெல்லாம் டார்ச்சர் கொடுத்தார்கள் என்பது குறித்து சித்ரா என்னிடம் தெரிவித்திருந்தார். எனவே அவர்கள் யாரென்று எனக்கு தெரியும்.

மர்ம கும்பல்

மர்ம கும்பல்

இதனால் என்னை சில மர்ம கும்பல் மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது உயிருக்கு ஆபத்து என்றால் சித்ரா மரண விஷயத்தில் காரணமானவர்கள் யார் என்பது குறித்து என்னுடைய நண்பர்கள் மூலம் போலீஸுக்கு தெரியவரும். சித்ரா எனக்கு தெரிந்து போதை மருந்தை பயன்படுத்தியதில்லை என்றார்.

சித்ரா மரணம்

சித்ரா மரணம்

இவரது பேட்டியை பார்த்த நிலையில் சித்ரா மரணத்தில் அரசியல்வாதி என்றால் யார் அவர், அதிலும் அவர் மாஜி அமைச்சராக இருக்கலாம் என்றெல்லாம் பேச்சுகள் அடிபடுகின்றன. இந்த நிலையில் ஹைமந்த் மேலும் கூறுகையில் விஜே சித்ரா மரணம் தொடர்பாக மறுவிசாரணை நடத்த வேண்டும்.

முன்னாள் எம்எல்ஏவை விசாரிங்க

முன்னாள் எம்எல்ஏவை விசாரிங்க

முன்னாள் எம்எல்ஏ ஒருவரிடம் விசாரணை நடத்தினால் உண்மை வெளியே வரும். கடை திறப்பு விழா ஒன்றில் முன்னாள் எம்எல்ஏ உடன் சித்ரா பங்கேற்றபோது சில விரும்பத்தகாத விஷயங்கள் நடந்தன. அதை என்னிடம் சித்ரா தெரிவித்திருந்தார். எனவே போலீஸ் என்னை அழைத்தால் அந்த விஷயங்களை கூறத் தயார் என ஹேம்நாத் ஒரு க்ளூவையும் அளித்துள்ளார். தற்போது முன்னாள் எம்எல்ஏ யாரென்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
VJ Chithra's husband Hemanth wants police to inquire EX MLA in her death case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X