டெல்லி போன ஆதவ் அர்ஜுனா.. அமித் ஷா உடன் சந்திப்பா? கூடவே போகும் ஹேமாமாலினி.. உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர்களுடன் தவெக ஆதவ் அர்ஜுனா இன்று சந்திப்பு நடத்த உள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சந்திப்பில் பல முக்கியமான விஷயங்களை அவர் ஆலோசனை செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆதவ் அர்ஜுனா இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பான செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் சர்ச்சைப் பதிவு தொடர்பாக வழக்கு பாய்ந்த நிலையில் தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆதவ் அர்ஜுனா தனி விமானத்தில் 5 பேருடன் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NSG கமாண்டோ பாதுகாப்போடு தனி விமானத்தில் ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம் செய்துள்ளார்.

TVK Vijay

ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம் ஏன்?

ஆதவ் அர்ஜுனா ஏன் டெல்லி பயணம் செய்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் பயணம் கடுமையான விவாதங்களை எழுந்துள்ளது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல்.. அவர் டெல்லிக்கு செல்வது கடுமையான விவாதங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது. அலுவல் பணி, தேசிய விளையாட்டு போட்டி தொடர்பான பணிகளுக்காக டெல்லி சென்றிருப்பதாக ஆதவ் அர்ஜூனா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் டெல்லி பயணம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இன்று சந்திப்பு

ஆதவ் அர்ஜுனா இன்று டெல்லியில் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அமித் ஷா உடன் இன்று ஹேமாமாலினியும் சந்திப்பு நடத்துவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கரூர் சம்பவத்தை ஆராய பாஜக சார்பில் எம்பி ஹேமமாலினி தலைமையில் 8 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நேற்று முதல்நாள் இவர்கள் கரூரில் ஆய்வு செய்தனர்.

அவர் ஆய்விற்கு பிறகு கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் இயல்பானதாக தெரியவில்லை. அங்கே நடந்தது சாதாரண விஷயம் போல தெரியவில்லை. ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிகழ்வு இது. இதில் எதோ அசாதாரமான் விஷயம் நடந்து உள்ளது. உள்நோக்கம் கொண்டு சிலர் செயல்பட்டது போல தெரிகிறது. உள்நோக்கத்தோடு சிலர் பணிகளை செய்து உள்ளனர் என்று நினைக்க தோன்றுகிறது என்று ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் ஹேமமாலினி இன்று அமித் ஷாவிடம் தனது ரிப்போட்டை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரிப்போர்ட் கொடுக்கப்படும் நேரத்தில் ஆதவ் அர்ஜுனா உடன் இருப்பார் என்று கூறப்படுகிறது.

ஆதவ் அர்ஜுனா பிரமாணபத்திரம் தாக்கல்

கரூர் கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியானது, காவல்துறையினராலும், உள்ளூர் ரவுடிகளுடன் சட்டவிரோதத் தொடர்பு கொண்ட உள்ளூர் அரசியல்வாதி ஒருவராலும் திட்டமிடப்பட்டது என்று தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளது.

செப்டம்பர் 28 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர விசாரணை கோரப்பட்டது. ஆனால் நீதிபதி அவர்களை செப்டம்பர் 30 முதல் விடுமுறை கால அமர்வுக்கு அனுப்பினார். நாளை இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது பிரமாண பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

தவெக சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணபத்திரம்

TVK சார்பாக ஆதவ் அர்ஜுனா தனது பிரமாண பத்திரத்தில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) காவல்துறையினரையும், உள்ளூர் ரவுடிகளையும் பயன்படுத்தி வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், மின்சாரத்தைத் துண்டித்ததாகவும், உண்மையை மறைக்க நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்த துயரத்தை ஆளும் DMK orchestrate செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

விஜய் பேச்சு தொடங்குவதற்கு முன்பே, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று அவர் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டார். பேரணியில் ஊடுருவிய சமூக விரோத சக்திகள், தங்கள் தலைவர் விஜயையும், அவரது பேச்சை கேட்கக் காத்திருந்த பொதுமக்களையும் நோக்கி செருப்புகளையும் கற்களையும் வீசியதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+