அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்!
சென்னை: திருமண விழாவுக்கு, நடிகை த்ரிஷா உடன் விஜய் வந்திருந்தது, தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் குறித்து, தொண்டர்கள், ரசிகர்களே கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

என்ன பஞ்சாயத்து?
விஜய் திருமணத்தை மீறி, நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்று அவரது மனைவி சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார். இந்த விஷயத்திற்காக அவர் விவாகரத்தும் கோரியிருந்தார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவில், அவர் கூறியிருந்த விஷயங்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
2021ம் ஆண்டு ஏப்ரலில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டறிந்ததாகவும், இது தனது திருமண நம்பிக்கையை முற்றிலும் சிதைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
விஜய் முதலில் அந்த உறவை முடிக்க உறுதியளித்தாலும், பின்னர் அதைத் தொடர்ந்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்த நடிகை விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதை விஜய் எதிர்க்காததும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்து வழக்கின் பொருளாதார கோரிக்கைகள்
விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப நிரந்தர ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என சங்கீதா கோரியுள்ளார். வழக்கு முடியும் வரை அல்லது மாற்று வசதி செய்து தரும் வரை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிக்க அனுமதி கேட்டுள்ளார்.
இந்த விவாகரத்து வழக்கிற்கான முழுச் செலவையும் விஜய்யே ஏற்க வேண்டும் என சங்கீதா வலியுறுத்தினார். மேலும், தேவையானால், குறிப்பிட்ட நடிகையை இரண்டாம் எதிர்மனுதாரராகச் சேர்க்க உரிமை வேண்டும் எனவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
குடும்ப கௌரவம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு
குடும்ப கௌரவம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி, ரகசிய விசாரணை மற்றும் ஊடக விவாதங்களுக்குத் தடை விதிக்க சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், விஜய் தனது நடத்தையை மாற்றிக் கொள்ளாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
மேலும், சங்கீதா மீது விஜய் கடுமையாக நடந்ததாகவும், அவருடன் பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வீட்டின் ஒரு பகுதியிலேயே தனிமைப்படுத்தி வாழ வைத்ததை மனரீதியான சித்திரவதை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாங்களே அடிச்சுக்குறோம்
இப்படி இருக்கையில், இன்று சென்னையில் நடந்த திருமண நிகழ்சிக்கு நடிகை த்ரிஷாவுடன் விஜய் வந்திருந்தார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். வழக்கமாக சோஷியல் மீடியாக்களில், விரிச்சுவர் வாரியர்ஸுக்கும், உடன்பிறப்புகளுக்கும் இடையேதான் பஞ்சாயத்து இருக்கும். ஆனால், இன்று விஜய்யின் செயலை பார்த்த தொண்டர்கள், இன்று ஒருநாள் விஜய்யை யாரும் அட்டாக் செய்யக்கூடாது. நாங்களே தாக்கிக்கொள்கிறோம் என்று திட்ட தொடங்கிவிட்டனர்.
தற்போது தவெகவினர் பலரும் விஜய்யின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் அனைத்து செயல்களுக்கும் உடன் இருந்து சமாளித்தோம். ஆனால், இந்த விஷயத்திற்கெல்லாம் சமாளிக்க முடியாது என்று கூறி, விஜய்க்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications