தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு!
சென்னை: தவெக வேட்பாளர் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி அளிக்கப்படாத நிலையில் கூட்டத்தை ஒத்திவைத்தது தவெக.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தனது அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்று தவெக தலைவர் விஜய், வேட்பாளர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. விஜய் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தபடவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி அளிக்கப்படாத நிலையில் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது தவெக. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறும் விதிமுறைகள் மற்றும் சில தொழில்நுட்பக் காரணங்களால், இறுதி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாளை மறுநாள் (மார்ச் 29 ஆம் தேதி) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்த அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் அனைவரையும் விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications