ரோடு ஷோ விதிகள்.. தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய ஐகோர்ட்
சென்னை: அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, கூட்டங்களுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க 3 வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு, கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விதிகளை உருவாக்கி அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஐகோர்ட் உத்தரவை ஏற்று, தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டங்களை நடத்தி, வரைவு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கியது.
இந்நிலையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, கூட்டங்களுக்கான அரசின் புதிய விதிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் செயல்பாட்டை முடக்கும் வகையில் உள்ளதாகவும், தவெக அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கவில்லை என்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ரோடு ஷோக்களை முறைப்படுத்த வெளியிடப்பட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க 3 வாரம் அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications