CBI Summon: விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று விஜய் நேர்காணல்! அப்போ டெல்லிக்கு போகலையா?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் தவெக தலைவர் விஜய் இன்று நேர்காணல் நடத்துகிறார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அளித்திருந்த நிலையில் விஜய் இன்று நேர்காணல் நடத்துகிறார்.
சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள விஜய்யின் தவெக தயாராகி வருகிறது. இதையொட்டி கடந்த மாதம் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்களை பெற்றது. அந்த வகையில் 234 தொகுதிகளுக்கு 4200-க்கும் மேற்பட்ட விருப்பமனுக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தது.

இந்த நிலையில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் விஜய் இன்று முதல் நேர்காணல் நடத்துகிறார். இதற்காக பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு நேர்காணல் தொடங்குகிறது.
முதல் நாள் நேர்காணலில் யார் யார் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து ஈமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில நிர்வாகிகள் நேர்காணலை நடத்தவுள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ வழக்குக்காக விஜய் டெல்லி செல்ல இருந்தது. இந்த நிலையில் கட்சி பணி, பல்வேறு நிகழ்ச்சி காரணமாக சிபிஐ அலுவலகம் வர இயலவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு 15 நாட்கள் அவகாசமும் கோரினார் விஜய்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அது போல் விஜய்யிடமும் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி, ஜனவரி 19 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தியது.
அப்போது டெல்லியில் செய்தியாளர்கள சந்தித்த நிர்மல் குமார், இத்துடன் விசாரணை நிறைவடைந்தது. இனியும் அவரிடம் விசாரணை ஏதும் நடத்தப்படாது என கூறியிருந்தார். ஆனால் நேற்றைய தினம் திடீரென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, விஜய்க்கு நிறைய பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஜனநாயகன் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. தற்போது நீண்டுக் கொண்டே செல்வதால் அதை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
இந்த நிலையில் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போயிருக்கிறார். அதிலும் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பிருப்பதாக கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து நடிகை திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக விஜய் கலந்து கொண்டார்.
விவாகரத்து சம்பவம் எல்லாம் வொர்த்தே இல்லை என மகளிர் தினவிழாவில் விஜய் பேசியிருந்தது. இதற்கு சொந்த கட்சிக்காரர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளது என நிறைய சிக்கல்களில் விஜய் சிக்கியுள்ளார். தற்போது சிபிஐ விசாரணை வேறு! இன்று ஆஜராகாவிட்டாலும் இன்னொரு நாளில் ஆஜராகித்தான் வேண்டும். இவற்றை எல்லாம் எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications